அற்புதங்களின் யேகோவா JEHOVAH OF MIRACLES 59-1126 1. நான் உணர்வதைப் போலவே நீங்கள் எல்லாரும் உணருகிறீர்கள் என்று நிச்சயித்திருக்கிறேன். பாடகர் குழு பாடுவதைக் கேட்க சரியான நேரத்தில் எழுந்துவிட்டேன். என்னே, நான் அதை விரும்புகிறேன். உங்களுக்கு அது பிடித்திருந்ததா? ஓ, என்னே, அது மிகவும் அருமையானதாக இருந்தது. நான் எப்பொழுதும் சொல்வதுண்டு... நான் நதிக்கு அப்பால் செல்லும்போது நீங்கள் என்னைக் காண வேண்டுமென்று விரும்பினால், அவர்கள் அங்கே பாடிக் கொண்டிருக்கின்றதான இடத்திலே நீங்கள் என்னைக் காணலாம். நான் -- நான் அங்கேதான் எங்கேயாவது இருப்பேன். அந்த மகத்தான தேவதூதர் பாடற்குழுவிலே, அந்தக் குரல்கள் அனைத்தையும் நான் ஒன்றிசைந்துக் கேட்க விரும்புகிறேன். அதை நீண்ட நேரமாக கேட்க என்னால் முடியும். [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி]. எப்பொழுதும் நான் பாட வாஞ்சிப்பதுண்டு. என்னால் வெறுமனே முடியாது -- என்னால் பாடவே முடியாது, நான் -- நான் ஒருமுறை... பலமுறைகள் ஆச்சரியமான கிருபை (Amazing Grace) என்ற பாடலைப் பாட முயற்சித்திருக்கிறேன். என் மனைவி இங்கே இருக்கிறாள். நான் அதைக் குறிப்பிட்ட உடனேயே, அவள், “பாட முயற்சிக்க வேண்டாம்; பாட முயற்சிக்க வேண்டாம்” என்கிற விதமாக தனது கையை இந்த விதமாக அசைக்க ஆரம்பிக்கிறாள். பாருங்கள்? கவலைப்படாதே தேனே, நான் பாட மாட்டேன். எனவே, நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் (சபையார் சிரிக்கின்றனர் – மொழிபெயர்ப்பாளர்). ஆனால், என்றாவது ஒரு நாள் பரலோகத்தில் ஓரிடத்தில் உள்ள உங்களுடைய பெரிய மகத்தான வீட்டிற்கு நீங்கள் வரும்போது, மரங்களுக்கிடையே மூலையில் உள்ள சிறு வீட்டில் இருந்து, வீட்டின் முகப்பில் இருந்து யாரோ ஒருவர் ஆச்சரியமான கிருபை என்ற பாடலை பாடக் கேட்பீர்கள், அப்பொழுது நீங்கள், “அதைப் பாடுவது சகோதரன் பிரன்ஹாம் தான், அவர் அங்கேதான் இருக்கிறார்” என்பீர்கள். (சகோதரன் பிரன்ஹாம் சிரிக்கிறார் - மொழி.) நான் அங்கே உங்களுடன் இருக்க விரும்புகிறேன். 2. இது ஒரு மகத்தான நாள், ஏனென்றால், இந்த நாளை கர்த்தர் உண்டுபண்ணி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி, உங்களில் அநேகர் இன்று காலை உங்களுடைய ஆராதனையில் உங்கள் போதகரின் செய்தியின் அருமையான ஐக்கியத்தைக் களிகூர்ந்திருப்பீர்கள், அது அருமையானது. நீங்கள் அவ்விதமே செய்தீர்கள் என்று நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், ஜெபத்தில் அவரைத் தாங்குங்கள்; அவர் மந்தையின் மேய்ப்பராயிருக்கிறார், மேய்ப்பனே ஆகாரம் அளிக்கிறவர். எனவே, நீங்கள் அவரை ஜெபத்தில் தாங்கி, உங்களால் முடிந்த ஒவ்வொரு வழியிலும் அவருக்கு உதவிடுங்கள். தேவன் அந்தச் செய்திகளை அவருக்குத் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருப்பார். 3. மேலும் இப்பொழுது, இக்கூட்டத்தில்தானே மனந்திரும்புதலைப் பெற்றுக் கொண்ட புதிதாய் மனந்திரும்பின உங்களுக்கு, எத்தனைப் பேர் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முன்வருகிற மகத்தான ஒரு திரள்கூட்டம் அங்கே இருக்கிறது. இப்பொழுது, “நல்லது, எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது” என்று வெறுமனே சொல்லி நழுவிப் போய்விட வேண்டாம். ஆனால், இங்கே உள்ள சபைகளில் அல்லது உங்களுக்கு மிக அருகில் உள்ள சபையில் அல்லது நீங்கள் விரும்புகிற ஒரு சபைக்குச் சென்று உங்களுடைய ஐக்கியத்தை வைத்துக்கொள்ளுங்கள். இந்த மனிதர்கள், இந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு நிதியுதவி செய்வதற்கான காரணம் (sponsoring) என்னவெனில், அவர்கள் இந்த ஊழியத்தை விசுவாசிக்கிறார்கள்; அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் அதை விசுவாசிக்காவிட்டால், அதைப் பிரதிநிதித்துவம் செய்யும்படியாக இங்கே அமர்ந்திருக்க மாட்டார்கள். நான் பிரசங்கிக்கிற அதேக் காரியத்தையே, முழு சுவிசேஷத்தையே, அவர்களும் பிரசங்கிக்கிறார்கள்; நிச்சயமாகவே, அவர்கள் உங்களுக்கு நன்மையானதையே நடப்பிப்பார்கள். நான் இங்கே சான் ஹோசேவில் (San Jose) வசிப்பேனானால், இந்தச் சபைகளில் ஒன்றை, எனக்கு அருகாமையிலுள்ள சபை ஒன்றைச் சார்ந்திருப்பேன். நான் அந்தச் சபையை சார்ந்தவனாய் இருப்பேன், ஏனென்றால், நான் -- நான் அதில் விசுவாசம் கொண்டுள்ளேன். நான் இதைப் பிரதிநிதித்துவம் செய்யும்படியாக இங்கே இருக்கிறேன், மேலும், இது ஜீவனுள்ள தேவனுடைய சபை என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும், நிச்சயமாகவே நான் உங்களுடைய ஒத்துழைப்பையும், அவர்களுடைய ஒத்துழைப்பையும் மெச்சிக் கொள்கிறேன். மேலும், எல்லாருமாக சேர்ந்து தேவனுடைய இராஜ்யத்திற்கு இப்பொழுது, புதிய ஆத்துமாக்களைக் கொண்டு வருகிறோம். அவருடைய குடும்பத்தில் புதிய பிள்ளைகள் பிறந்திருப்பதால், தேவன் மகிழ்ச்சியுள்ளவராய் இருப்பார். 4. இப்பொழுது, நாளை இரவு... வெள்ளி இரவு நமக்கு உண்டு, மற்றும் சனிக் கிழமை காலை முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் காலை ஆகாரம் நமக்கு உண்டு. அந்தக் காலை உணவில் நான் பேசும்படியான சிலாக்கியமும் கனமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், சனிக்கிழமை காலை அதன் பேரில் பேசும்படி விரும்புகிறேன். நடைபெறும் இடம் எங்கே என்று அவர்கள் ஏற்கனவே அறிவித்து விட்டார்கள் என நான் யூகிக்கிறேன். பின்னர், ஞாயிறு பிற்பகல், மீண்டும் இங்கே, கடைசி ஆராதனை இருக்கும். இன்றிரவு நான் கூற விரும்புவது, இப்பொழுதிலிருந்து கடைசி ஆராதனை வரை நடுவில் ஏதும் நிகழாமல் இந்தக் கூட்டங்களுக்காக நான் ஜீவித்தால், நான் தேவனுக்கு நன்றி செலுத்துவேன். இது ஒரு அருமையான ஆராதனைக் கூட்டமாய் இருந்து வருகிறது. இதிலே மிகச் சிறந்த விஷயம் என்னவெனில், ஒற்றுமை மற்றும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டதைப் போல நெருக்கமான ஐக்கியத்தை உணரும் காரியமே. அதைத் தான் நான் விரும்புகிறேன். அங்கேதான் பரிசுத்த ஆவியானவரால் கிரியை செய்ய முடியும். ஊழியம் செய்யும்படி எனக்குப் பின்னால் இருக்கும் மக்களை மேடையிலிருந்து நான் வெளியேற்ற வேண்டியதாய் இருந்த நேரங்களை நான் கண்டிருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். உங்களில் அநேகர் அதைக் கண்டிருக்கிறீர்கள். ஆனால், இந்தக் கூட்டத்தில், நான் ஒரு காரியத்தையும் குறிப்பிடவில்லை, ஏனென்றால், எல்லா இடங்களிலும் ஒத்துழைப்பானது மிகவும் முழுமையாகக் காணப்படுகிறது. இந்தக் கூட்டமானது அற்புதமாக இருக்குமட்டாக, அங்கே அவர்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் திரும்பவும் இல்லை, எதையும் சொல்லவும் இல்லை. இங்கே இந்த ஊழியக்காரர்களில் சிலர் சுகவீனமாயிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். கவலைப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகிவிடும். புரிகின்றதா? நான் அவர்கள் பக்கமாக திரும்பி, ஜனங்களில் யாரையாவது (ஜெபிக்காமல்) விட்டுவிட்டால், தங்களுக்காக ஜெபிக்கப்படுவதை விட தங்களுடைய கூட்டத்தாரில் ஒருவர்கூட விடப்படக் கூடாது என்றே விரும்புவர், ஏனென்றால், அவர்கள் மேய்ப்பர்களாயிருக்கிறார்கள். அது தான் (நல்ல) அணுகுமுறையாக இருக்கும், அவர்கள் அதை அந்த விதமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நான் -- நான் நிச்சயமாக நம்புகிறேன். மேலும், மிகவும் தகுதியான ஜனங்கள்... 5. இப்பொழுது, இங்கே மேலே வைக்கப்பட்டுள்ள கைக்குட்டைகள் மற்றும் பொருட்களுக்கு, சிறிது நேரம் கழித்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்படும் போது, நான் சென்று, இவைகளுக்காகவும் ஜெபிப்பேன். ஏனென்றால், சபையார் மீதும், சுற்றிலும் எங்கும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நான் உணரும்போது அவைகளுக்காக ஜெபிப்பதையே நான் விரும்புவேன். ஒரு சிறு குறிப்போடு இணைக்கப்பட்டுள்ள இந்த கைக்குட்டையானது, மரணத்தருவாயில் கிடத்தப்பட்டுள்ள என்னுடைய தாயாரிடம் கொண்டு செல்லப்பட்டால், அல்லது மரணத்தருவாயில் இருக்கிற என்னுடைய பிள்ளைகள் ஒருவரிடம் கொண்டு செல்லப்பட்டால் என்னவாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஜெபிக்கும்படியாக அதை என் சகோதரனிடம் இருந்து நான் பெற்றுக்கொள்ளத்தக்க, மிகவும் உத்தமமாய் இருக்க வேண்டுகிறேன். நல்லது, இது ஒருவேளை யாராவது ஒருவருடைய தாயாரிடமோ அல்லது யாராவது ஒருவருடைய பிள்ளையிடமோ கொண்டு செல்லப்படலாம். இந்தக் காரியங்களைக் குறித்து நாங்கள் மிகவும் ஆழமான உத்தமமாய் இருக்க விரும்புகிறோம், அப்பொழுது, தேவன் ஜெபத்திற்கு பதில் அளிப்பார். 6. இப்பொழுது, அது சமீபமாய் உள்ளது. இந்தக் கூட்டமானது கிறிஸ்துமஸ் நேரத்தை ஒட்டி இருக்கிறது என்று நான் அறிவேன். வாஷிங்டனிலுள்ள ஸ்போகேன் (Washington, Spokane) என்ற இடத்தில் வேறொரு கூட்டம் நமக்கு இருக்கப் போகிறது. அவ்வாறே என்று நம்புகிறேன், அது ஸ்போகேன் அல்ல, அது வாஷிங்டனிலுள்ள யாகிமா (Yakima), அது கிறிஸ்துமஸ் நேரத்தை ஒட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று நாம் காண்கிறோம். மேலும், இந்தக் கூட்டங்கள் தாங்கப்பட வேண்டும். நீங்கள் அதை அறிவீர்கள். ஏனென்றால், நான் அவர்களைத் தாங்கும் அளவிற்கு என்னிடம் போதுமான பொருளாதார வசதியில்லை. நான் எனக்கென்று ஒரு பணத்தையும் நான் கேட்பதில்லை. அவர்கள் அந்த செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார்கள், எனவே நாங்கள் கடன்படுவதில்லை, அவ்வளவுதான். புரிகிறதா? மேலும் இப்பொழுது, நான் -- நான் வேலை செய்கிறேன்; என்னுடைய சபையிலிருந்து நான் சம்பளத்தைப் பெற்றுக்கொள்கிறேன். ஒரு வாரத்திற்கு நூறு டாலர் என்பதே நான் என் சபையிலிருந்துப் பெற்றுக்கொள்வதாகும். ஆனால், இந்தக் கூட்டங்கள் தாங்கப்பட வேண்டும். இந்த நேரங்களில் ஜனங்கள்... நீங்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளைப் பெற்றிருப்பீர்கள். அநேகர் என்னிடம், “நீங்கள் இங்கிருந்து சென்றவுடன் எங்கள் சபைக்கு வருவீரா? இப்பொழுது உமக்கு குறைவான நேரமே இருக்கிறது” என்கிறார்கள். நான் என்னுடைய கூடாரத்திற்குத் திரும்பிச் செல்கிறேன், ஏனெனில், அவர்களுக்கு ஒரு சிறிய எழுப்புதல் உண்டாகும் பொருட்டாக, அவர்களுக்கு பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்வது மற்றும் அது போன்ற காரியங்களை அவர்களுக்கு போதிக்கும்படியாக நான் செல்கிறேன். பாருங்கள், நாங்கள் அங்கே ஒரு பாப்டிஸ்ட் பின்னணியில் இருக்கிறோம், எனவே, அவர்களோடுகூட ஒரு உண்மையான காரியத்திற்குள் செல்ல விரும்புகிறோம். அது தான் காரணம், ஏனென்றால், நான் மற்றுமொரு கூட்டத்திற்கு வந்தால், தாய்மாரும் தகப்பன்மாரும் தங்கள் பணத்தை கூட்டத்தைத் தாங்கும்படி செலவிட நேரிடும். பின்னர், குழந்தைகள், சிறுவர்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஒருவேளை அவர்கள் ஏதோவொன்றை இழக்க நேரிடும். அது என்னை மோசமான உணர்வு அடைய செய்யும். புரிகிறதா? எனவே, நான் கிறிஸ்துமஸ் காலம் முடிந்தபின் வருகிறேன். பின்னர் நாம் மீண்டுமாக கூட்டங்களைத் துவங்குவோம். எனவே, கிறிஸ்துமஸ் நேரம் முடியும் முன்பாக, ஒவ்வொன்றையும் அப்படியே விட்டுவிடவே விரும்புகிறேன். 7. பொருளாதார நிலையை சமாளிக்க என்னால் இயலும் என கருதுகிறேன், எனவே, ஒரு காணிக்கைக்காக நீங்கள் எதையும் குறிப்பிட வேண்டிய அவசியம் கூட இருக்காது. எப்படியாயினும், நான் இதை குறிப்பிட்டாக வேண்டும், ஏனென்றால்... ஒரு முறை நான் அதை காசோலை வாயிலாக பெற்றேன், அதை ஒருவர் எனக்கு கொடுக்க இருந்தார். நான் நினைத்ததை விட அதிகமாக, அது கொடுக்கப்படத்தான் வேண்டும். ஆனால், நான் -- நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அந்த சகோதரன், “நல்லது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்கிறேன், நான் வெறுமனே அந்தக் காசோலையை எடுத்துக்கொள்வேன். நீங்கள் வந்து, கூட்டங்களுக்குச் செல்லும்போது, நாங்கள் காணிக்கை எடுக்கவோ அல்லது வேறேதாவதையோ செய்ய மாட்டோம்” என்று கூறினார். அப்பொழுது நான், “அது அருமையானது, நான் அதை செய்வேன்” என்றேன். அதைச் செய்தேன். அது வெற்றிகரமானதொன்றாக இல்லை. பாருங்கள், கூட்டத்தில் ஜனங்கள் ஏதாவதொன்றை பெற்றிருக்க வேண்டும். இது, அவர்களுடைய ஆராதனைக் கூட்டம். பின்னர், அவர்கள் வீதியில் என்னை சந்தித்து என்னிடம், “இந்தக் கூட்டங்களைக் குறித்தென்ன? அதில் எங்களுடைய பங்களிப்பு ஒன்றுமே இல்லை; அவர்கள் ஒரு காணிக்கை கூட எடுக்கவில்லை” எனக் கூற நேரிடும். எனவே, காணிக்கை என்பது ஆராதனையின் ஒரு பாகம் ஆகும். அது சரியே. அன்றொரு நாள், ஜெஃபர்சன்வில்-ல் (Jeffersonville) உள்ள புதிய கூடாரத்திற்கென்று ஹாட்டி ரைட் அவர்கள் (Hattie Wright), தான் நேர்ந்து கொண்ட இருபது டாலரை நான் திருப்பிக் கொடுக்கச் சென்ற போது, கர்த்தர், “அவளை அப்படியே விட்டுவிடு” என்று கூறினார். அப்பொழுதிலிருந்து நான் அந்த காரியங்களைக் குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். ஏன் அவளை விட்டு விடும்படி சொன்னார் என்று பின்னர் சற்று நேரத்தில் கண்டு கொண்டேன். 8. எனவே, அப்பொழுதிலிருந்து – தேவனுடைய ராஜ்யத்திற்கென்று யாராவது எதையாவது கொடுக்க விரும்பினால் நான் அதைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது என்று என் இருதயத்தில் ஒரு வாக்குறுதி பண்ணிக் கொண்டேன். நான் அநேகமுறை அவ்விதமாகச் செய்து, என்னால் கூடுமானவரை விரைவாக அதைப் புறந்தள்ளி இருக்கிறேன். அவ்விதம் செய்வதால் நான் ஜனங்களை கொள்ளையாடினதாக உணர்ந்தேன், ஏனென்றால், தேவன் அதற்கென்று ஒரு திட்டத்தை கொண்டிருந்தார்... எனக்கு கெஞ்சுவதில் நம்பிக்கை இல்லை. இல்லை ஐயா, கெஞ்சிக் கேட்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை... ஆனால், ஜனங்களிடம் அவ்விதம் இருக்கட்டும் என்று சொல்வதுண்டு... மற்றக் காரியங்களை தேவன் பார்த்துக் கொள்வார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நிச்சயமாகவே, அவர் அதைச் செய்கிறார். அவர் அதை ஜனங்களின் இருதயத்தின் மேல் வைக்கிறார். அநேக முறைகள், ஏதோ ஒன்றைச் செய்யும்படி தேவன் ஜனங்களின் இருதயத்தின் மேல் அதை வைக்கிறார் என்று சிந்தித்திருக்கிறேன். பின்னர், “வேண்டாம், நான் அதை எடுத்துக் கொள்ள மாட்டேன், அதை செய்ய வேண்டாம்” என்று அதற்கு முரண்பாடாகக் கூறி, திரும்பி விடுவேன். அந்த சிறிய விதவை, தனக்குண்டான எல்லாவற்றையும், அந்த மூன்று காசுகளைப் போட்டதையும், ஐசுவரியமான மனிதன் ஆயிரக்கணக்கான பணங்களைப் (dollars) போட்டதையும் கவனித்துக் கொண்டிருந்த இயேசுவை சிந்தித்துப் பார்க்கிறேன். ஆனால், அவர் ஒருபோதும் அவளைத் தடுக்கவில்லை; அவள் அதைச் செய்யும்படி அவளை விட்டுவிட்டார், ஏனெனில், தான் அவளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறித்து அவர் அறிந்திருந்தார். மாற். 12:42, லூக். 21:2 9. இப்பொழுது, இந்தக் கைக்குட்டைகள், இந்தக் கூட்டத்தில் உங்கள் கைக்குட்டைகளை நாங்கள் தவறவிட நேர்ந்தால், ஜெஃபர்சன்வில், இண்டியானா விலாசத்திற்கு ஒரு கடிதம் எழுதுங்கள். நாங்கள் ஒன்றை ஜெபித்து, உங்களுக்கு அதை அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்வோம். அது முற்றிலும் இலவசம். இப்பொழுது, விற்கும்படியாக நாங்கள் எதையும் பெற்றிருக்கவில்லை. நல்லது, நான் அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். புத்தகங்கள், ஒலிநாடாக்கள், படங்கள், இன்னும் மற்றவைகளை பையன்கள் இக்கட்டிடத்திற்குப் பின்னால் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். மேலும் அவைகளை... நான் அந்த புத்தகங்களை வாங்குகிறேன். சகோதரன் கார்டன் லின்ட்சே (Bro. Gordon Lindsay) அந்தப் புத்தகங்களை அச்சிடுகிறார். நான் அதை நாற்பது சென்டுகளுக்கு வாங்குகிறேன், அதைவிட குறைவான விலைக்கே விற்க வேண்டியவனாயிருக்கிறேன். பின்னர் அதற்குண்டான தொகையானது அவர்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் அவர்களுக்கு எந்த லாபத்தையும் ஈட்டித் தரவில்லை, நஷ்டத்தைக் கொடுக்கிறீர்கள். அது செய்தியாயிருக்கிறது. மேலும் அந்த படங்கள், அவர்கள் அதை அனுப்புவதற்கான செலவானது... நாங்கள் எந்த லாபத்தையும் ஈட்ட விரும்பவில்லை. இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும்போது நாம் எதையும் கொண்டு போவதில்லை என்பதும் நிச்சயம். நாங்கள் செய்ய முயற்சிப்பதென்னவெனில்... ஏதாவதொரு வழியில் உங்களுக்கு அது உதவியாயிருக்கும் என நான் நினைக்கவில்லை என்றால், அந்தப் புத்தகங்களையும் மற்ற காரியங்களையும் அங்கே வைத்திருக்க மாட்டேன். புரிகிறதா? நான் பையன்களிடம் கூறியிருக்கிறேன்... நான் புத்தக நிலையத்திற்கு சென்று, அங்கே சற்று நின்று கவனிக்கும் போது, சிறிது நேரத்தில் ஒரு வயதான தகப்பனார் வந்து, “அந்தப் புத்தகத்தின் விலை என்ன?” என்று கேட்கும்போது, “அது ஐம்பது சென்ட்டுகள்” என்று கூறப்படும் நிலையில், அவர், “என்னிடம் இவ்வளவு தான்...” என்று கூறுவாரானால், எப்படியாவது அவருக்கு அதைக் கொடுத்துவிடுங்கள். அவ்விதமே செய்யுங்கள். புரிகிறதா? யாராவது அதை விலை கொடுத்து வாங்க முடியாவிட்டால், ஏழ்மையான நபர், அது போன்று இருக்கும் பட்சத்தில், அவர் அதை பெற்றுக்கொள்ளட்டும். அது சரியே. எங்கேயாவது, ஏதாவது ஒரு வழியில் நமக்கு அது கிடைக்கும். மேலும், அது அவ்விதமே இருந்து வருகிறது, அது அவ்விதமே இருக்கும், நீங்கள் மாத்திரம் தேவனை முதலாவதாக வைப்பீர்களென்றால்; அதுவே எல்லாமாயிருக்கிறது. தேவனை முதலாவதாக வைக்கவேண்டும். 1-தீமோ. 6:7 10. இப்பொழுது, நான் அந்தக் கடிகாரத்தை கவனித்துக் கொண்டே வருகிறேன். நாம் இருக்க வேண்டிய நேரத்தை விட அதிகமான நேரம் இருக்க வேண்டாம் என நான் உணருகிறேன், ஏனென்றால், நாளை நீங்கள் உங்கள் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான உணர்வை பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு இரவும் கூடுமானவரை ஒன்பதரை மணியளவில் வெளியேற முயற்சித்திருக்கிறேன். எனவே, நாம் தொடர்ந்து செல்வதற்கு முன்பு, வார்த்தையை வாசிக்கிறேன், நாம் நம்முடைய தலைகளை வணங்கி, வார்த்தையின் ஆக்கியோனிடம் பேசுவோம். யாராவது ஜெபத்தில் நினைவுகூறப்பட வேண்டுமென்று இருப்பீர்களானால், உங்களது கரங்களை உயர்த்தி, உங்களுடைய தேவை என்ன என்பதை கூறுவீர்களா? அந்த ஜனங்களை கவனியுங்கள். 11. கர்த்தாவே, கிருபையுள்ள பிதாவே, பரலோகத்தின் தேவனிடம் வேண்டுதலுக்காக தங்கள் கரங்களை உயர்த்தின பையன்களையும் பெண்பிள்ளைகளையும், புருஷர்களையும் ஸ்திரீகளையும் நான் காணும்போது, என் இருதயத்தை ஏதோ ஒன்று பரபரப்பாக ஆக்குகிறது. நிச்சயமாகவே நான்... கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவியாகிய எனக்கே அது அப்படிப்பட்ட உணர்வை உண்டாக்குமானால், மென்மையான, கிருபை நிறைந்த பரலோகத்தின் பிதாவானவர் தங்கள் கரங்களை உயர்த்தின தம்முடைய பிள்ளைகளை அவர் காணும்போது, அது அவருக்கு எப்படிப்பட்டதான காரியத்தை உண்டாக்கும்? ஒவ்வொரு கரங்களும் எதை பிரதிநிதிப்படுத்துகிறது என்பதை முடிவில்லா தேவன் சரியாக அறிந்திருக்கிறார். அவர்களுடைய வாஞ்சைகளுக்குத் தக்கதாக அவர்களுக்கு தந்தருளும்படி, பிதாவே, நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன். அவைகள் அபரிமிதமாக அருளப்படுவதாக. வியாதியாய் உள்ளவர்கள் மற்றும் துன்பப்படுகிற அனைவர்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். சிறைச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன, ஓ, கர்த்தாவே அதற்கு முடிவே இருக்காது. அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நினைவுகூற வேண்டுமென்றும், அவர்களுடைய வியாதியுள்ள சரீரங்களை சுகப்படுத்த வேண்டுமென்றும், அவர்களுடைய வேதனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமென்றும், ஒரு சபையாக இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுடைய ஆத்தும எதிரியை துரத்திவிட்டு, அவர்களிலிருந்து அவிசுவாசத்தை நீக்கிவிடும். இயேசுகிறிஸ்துவின் வல்லமையினால் அவர்கள் முற்றிலும் விடுதலையடைவார்களாக. 12. கர்த்தாவே, இங்கே பிரதிநிதித்துவப்படுத்தபட்ட ஒவ்வொரு சபையையும், ஒவ்வொரு சபை அங்கத்தினர்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று இன்றிரவு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் சார்ந்திருக்கிற சபையில், எங்களுடைய ஜீவியங்களுக்காக, உம்முடைய ஆவியானது உம்முடைய சித்தத்திற்குள் எங்களை முன் நடத்தி, எங்களை வழிநடத்துவாராக. கர்த்தாவே, பரிசுத்த ஆவியை உம்முடைய சபை மீது இங்கே இன்றிரவு புதிதாக பொழிந்தருளும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாவிகள் அழுகையோடு பீடத்தண்டைக்கு வரவும், பரிசுத்தவான்கள் களிகூரவும், வியாதியஸ்தர்கள் சுகமடையவும், முடவர்கள் மான்களைப் போல துள்ளிக் குதிக்கவும் செய்யத்தக்க அளவில், ஒவ்வொருவர் மேலும் அசாதாரணமான அபிஷேகம் கடந்து வரும்படி, அப்படிப்பட்டதான வல்லமையில் அவர் இறங்கி வரட்டும். உமது மகிமைக்காக, கர்த்தாவே, இதை அருளும்! சிறிய பாடற்குழுவினர் சற்றுமுன்பு எங்களுக்காக பாடின, நாங்கள் ஏற்கனவே கேட்டிருந்ததான சீயோனின் பாடல்களில் மிகவும் முதன்மையானதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இளம் வயதினர் தங்களது ஜீவியத்தை கர்த்தராகிய இயேசுவின் சேவைக்கென்று அர்ப்பணித்திருக்கிறதற்காகவும், உம்முடைய மகிமைகென்று தங்களுடைய தாலந்துகளை அவர்கள் உபயோகிப்பதற்காகவும், ஓ, எவ்வளவாக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், அவர்கள் செய்கிற எல்லாவற்றிலும் அவர்கள் விருத்தியடைய வேண்டுமென்றும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். 13. இப்பொழுது, உம்முடைய வார்த்தை வாசிக்கப்படுவதை ஆசீர்வதியும், பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்து, இன்றிரவு அதை பெற்றுக் கொள்வதற்கென்று தெரிந்து கொள்ளப் பட்டவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் அதை மூழ்கச் செய்வாராக. ஓ! கர்த்தாவே, சிலுவையின் பின்னால், பேசுபவரை மறைத்துக் கொள்ளும், கர்த்தராகிய இயேசுவையும், அவருக்கென்று ஆத்துமாக்களை ஜெயித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் மாத்திரம் நாங்கள் காணட்டும். பின்னர், ஜெப வரிசை துவங்கும் போது, வளாகத்திற்குள் இருக்கும் ஒருவர் கூட அல்லது ஜெப வரிசையில் ஒருவர் கூட முற்றிலும் சுகம் அடையாத நிலையில் இந்த மேடையை விட்டு செல்லாதிருப்பார்களாக. அனைவரும் சுகமடையும் அளவிற்கு, அவ்வளவான ஒரு அபிஷேகமும், அவ்வளவான பரிசுத்த ஆவியின் ஒரு ஊற்றப்படுதலும் இங்கே காணப்படுவதாக. நாளைய தினத்திலே, இப்பொழுது இங்கே நாற்காலிகளில் இருப்பவர்கள், படுக்கைகளில் இருப்பவர்கள், வியாதி மற்றும் வருத்தத்திற்கு உள்ளானவர்கள், மற்றெங்குமுள்ள வியாதியஸ்தர்களை அழைத்து, “சீக்கிரம் வந்து உங்களுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்வதற்காக அழைக்கப்படும் தொலைபேசி அழைப்புமணி ஓசையானது நாடெங்கும் ஒலிக்கட்டும். கர்த்தாவே, அதை அருளும். இவையெல்லாவற்றையும் உம்முடைய மகிமைக்காக நாங்கள் கேட்கிறோம். உம்முடைய சொந்த நேச குமாரனும், எங்கள் இரட்சகருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 14. இன்றிரவு, நீங்கள் என்னோடு கூட வேதாகமத்தை வாசியுங்கள் அல்லது அதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். என்னோடு கூட பரிசுத்த லூக்கா 1-ம் அதிகாரத்திற்கு திருப்ப விரும்புகிறேன். 36-ம் வசனத்திலிருந்து துவங்கி சில பகுதிகளை வாசிப்போம். நீங்கள் சபைக்கு வேதாகமத்தை கொண்டு வருவதைக் காண நான் விரும்புகிறேன். அதைக் குறித்து ஏதோவொன்று உள்ளது, நான் வேதத்தை கொண்டு வருவதை நேசிக்கிறேன். 15. அருமையான பாடகர்களின் குழுவிற்கு போதகராய் இருக்கிற என்னுடைய கருப்பின சகோதரனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை தென்பாகத்தில் ஒரு கருப்பின சகோதரனைக் குறித்து அவர்கள், அவர் எப்பொழுதுமே வேதாகமத்தைக் கொண்டு வருவார், ஆனால் அவரால் ஒரு வார்த்தையைக் கூட படிக்க முடியாது என்பதாக கூறினர். அவர்கள் அவரிடம், “நீங்கள் எதற்காக வேதாகமத்தைக் கொண்டு வருகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அதை விசுவாசிக்கிறேன், எனவே அதைக் கொண்டு வருகிறேன்” என்றார். அது ஒரு நல்ல அறிகுறியாய் இருக்கிறது. “நல்லது, பின்னர் அது என்ன கூறுகிறது என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “மற்றவர்கள் அதை வாசிப்பதை நான் கேட்பேன். அட்டைப் பக்கம் முதல் அட்டைப் பக்கம் வரை உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். நான் அட்டைப் பக்கத்தையும் கூட விசுவாசிக்கிறேன், ஏனெனில், அதில் ‘பரிசுத்த வேதாகமம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்றார். “அதில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நீர் விசுவாசிக்கின்றீரா?” என்று கேட்டார். “அதில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நான் விசுவாசிக்கிறேன்” என்றார். மேலும், “கர்த்தர் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அதைச் செய்வேன்” என்றார். “இப்பொழுது மோஸ் அவர்களே, நீர் அதை நன்றாக அறிந்திருக்கிறீர். ஒரு வேளை தேவன் உம்மை இந்த கருங்கல் சுவற்றினூடாக குதிக்கச் சொன்னால், நீர் குதிப்பீரா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நல்லது, தேவன் என்னை குதிக்க சொல்வாரானால், நான் அந்த இடத்தை அடையும் போது, நிச்சயமாக தேவன் அங்கே ஒரு துளையை வைத்திருப்பார்” என்றார். ஆகவே, அதுதான் அதைப் பற்றியதான காரியம். கர்த்தர் அவரை குதிக்க சொல்லியிருப்பாரானால், அவர் அந்த இடத்தை அடையும் தருணத்தில், தேவன் ஒரு துளையை (வழியை) கொண்டிருப்பார். எவ்வளவாக அது உண்மையானதாக இருக்கிறது. 16. இப்பொழுது, பரிசுத்த லூக்கா புஸ்தகம், 36-ம் வசனத்திலிருந்து நாம் வாசிப்போம். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். 17. அது நிச்சயமாகவே... அப்பொழுது தான் சூரியன் உதயமாகி யூதேயாவின் வானங்களில் பிரகாசிக்க மேலேறி தனது பிரகாசத்தை கலிலேயா மீது பிரதிபலித்துக் கொண்டிருந்த போது, ஒரு சிறு கன்னி, வீதியிலே நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் தன் கரங்களின் கீழ் தண்ணீர்க்குடம் வைத்திருந்தாள். நிச்சயமாகவே அது ஓய்வுநாளுக்கு பின்பதான திங்கட்கிழமையாக இருந்திருக்கும். அந்த நாளுக்குத் தேவையான தண்ணீரை பெறும்படி அவள் அந்த பொது கிணற்றுக்கு செல்லும் வழியில் இருந்தாள். இன்றிரவு நாம் அவளைக் குறித்துப் பார்க்கையில், அவள் தலை குனிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாத ஒரு இளம்பிள்ளையாய் இருந்தாள். அவள் பார்ப்பதற்கு, ஒரு ஆழமான பொருளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தவளைப் போலக் காணப்பட்டாள். அவள் யோசேப்பு என்கிற ஒரு இளம் வாலிபனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவன் ஒரு தச்சனாயிருந்தான், அச்சமயத்தில் அவன் ஒரு சிறப்பு கவனம் ஈர்க்கத்தக்கதான ஒரு சிறு வீட்டை, தானும் தன் அன்பான சிறிய மனைவி மரியாளும் வசிப்பதற்கென்று கட்டிக் கொண்டிருந்தான். மேலும், அது எல்லாவிதத்திலேயும் சிறப்பானதாக இருக்க வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு நாளும் அவள், யோசேப்பு மதிய உணவு எடுக்கும் வேளையில் அவனிடம் வந்து, அவனோடு பேசி, அந்த வீட்டின் அமைப்பைக் குறித்து அளவளாவி, அந்த சிறிய கதவுகள் எப்படி பொருத்தப்பட வேண்டுமென்றும் பேசுவாள். அது ஒரு சிறப்பு மிக்க வீடாய் இருக்க வேண்டியதாயிருந்தது. மரியாள் வசித்த இடமானது, சமவெளியினூடாக ஒரு மலைப்பாங்கான இடமாயிருந்தது. ஞாயிறு ஆராதனைகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டின் முன்தாழ்வாரத்தில் அமர்ந்து, தங்கள் இரவு உணவிற்குப் பிறகு, அந்த பசுமையான மற்ற மலைப்பிரதேசத்தை நோக்கி பார்த்து, அங்கே உள்ள வீட்டின் முக்கோணச்சுவரை கவனித்தவாறு, எதிர்காலத்தில் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்து திட்டம் பண்ணுவார்கள். 18. முந்தின ஞாயிறு, நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில், அது வழக்கத்திற்கு மாறான ஞாயிறாக அமைந்திருந்தது. நல்ல போதகர் ஒரு வல்லமையான செய்தியைப் பிரசங்கித்திருந்தார். அவர் ஆபிரகாமின் மகத்தான தேவனைக் குறித்தும், எப்படியாக எகிப்திலே தம்முடைய பிள்ளைகளை சந்திக்கும் நாட்களில், எப்படியாக ஒரு வல்லமையுள்ள கரத்தினால் அவர் அவர்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் என்றும், எப்படியாக அவர் தம்மை வானங்களையும் பூமியையும் ஆள்பவராக காண்பித்தார் என்றும், எப்படியாக தண்ணீரானது அவருடைய வழியில் குறுக்கே நிற்க முடியவில்லை என்றும், அவருடைய தெய்வீக சித்தத்தைத் தடுக்க எதுவும் கிடையாது என்றும், எப்படியாக பிரயாணத்தில் உணவில்லாத தம்முடைய பிள்ளைகளைப் போஷிக்க தம்முடைய சொந்த கரங்களால் இரவில் அப்பமாகிய உணவை வெளியிலே தூவினார் என்றும் பிரசங்கித்திருந்தார். மேலும் அவர், ஜனங்களுக்கு இறைச்சி இல்லாதிருந்த நேரத்தில், எப்படியாக கர்த்தராகிய யேகோவா தேவன் ஒரு பெருங்காற்றை வீசச் செய்து, ஆயிரக்கணக்கான காடைகளை பாளயம் எங்கும் விழும்படி செய்தார் என்பதையும் மேற்கோள் காட்டினார். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தங்கள் கரங்களைத் தவிர வேறொன்றையும் (வேறு எந்த ஆயுதங்களையும்) பயன்படுத்தாமல் அவ்வளவான காடைகளைப் பிடித்து அவைகளை சமைத்து தங்களுக்கு வேண்டியமட்டும் சாப்பிட்டார்கள். இந்த இடத்தைக் குறிப்பிட்டு யோசேப்பு, “அன்பே, அந்த ஜனங்களை போஷிக்க, எவ்வளவு காடைகள் தேவைப்பட்டிருக்கும் என்பதை நீ யோசித்துப் பார்த்தாயா?” என்று நிச்சயம் கேட்டிருப்பான். ஏனென்றால், பாளயத்தில் கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் ஜனங்கள் இருந்தார்கள். ஒரு மனிதன் எளிதாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காடைகளை திருப்தியாக சாப்பிட முடியும். எனவே, ஐம்பது லட்சம் காடைகளுக்கு மேலாக தேவைப்பட்டிருக்கும். ஆனால், அவரோ சிருஷ்டிகர், யேகோவா. எவ்வளவாக அவரால் காடைகளை சிருஷ்டிக்க முடிந்தது. பாலஸ்தீனா முழுதும் அல்லது வனாந்திரம் முழுதும் கூட ஐம்பது லட்சம் காடைகள் இருந்திருக்காது; ஆனால் அவரோ, அவைகளை அங்கே சிருஷ்டிக்க முடிந்த யேகோவா தேவனாக இருந்தார். அங்கே ஒன்று கூட இல்லாமல் இருந்திருந்தாலும், அவைகளை அவரால் சிருஷ்டித்திருக்க முடியும், ஏனென்றால், ஆபிரகாமின் நாட்களில் அவர் அதையே செய்தார், அந்த மலையின் மேல், ஆபிரகாம் அவரை யேகோவா-யீரே -- “தமக்கு தேவையான எதையும் கர்த்தர் தந்தருளுவார்” என்று அழைத்த போது தேவன் அதையே செய்தார். எண். 11, ஆதி. 22:14 19. பின்னர், யோசேப்பு நிச்சயமாக இவ்வாறாக கூறியிருப்பான், அதாவது, “செய்தியானது உறைக்கத் தக்கதாய் இருந்தது, ஆனால், இறுதியிலோ ரபீ, ‘யேகோவா அற்புதங்களை செய்து வந்தார் என்பது உண்மைதான், ஆனால் அந்தோ, இன்றைக்கு யேகோவா அற்புதங்களையெல்லாம் செய்வது கூட கிடையாது, அந்த நாட்களெல்லாம் வெகு காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. யேகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் நாம் சபைக்குச் சென்று, செலுத்த வேண்டியதைச் செலுத்தி, ஒரு நல்ல எளிமையான வாழ்க்கையை வாழ்வதே’ என்று கூறின போது, அந்த ரபீ செய்தியை பாழ்ப்படுத்தி விட்டார் என்றே நான் நினைத்தேன்.” மேலும் யோசேப்பு, “நான் அந்த ரபீயோடு ஒத்துப்போகவில்லை, ஏனென்றால், அவர் தேவனாயிருந்தால், அவர் மாறாத அதே தேவனாகத் தான் இருக்க வேண்டும். அவர், யேகோவா-யீரே -- அவர்களுடைய தேவைகளெல்லாம் பார்த்துக் கொள்வார் என்றால், நம்முடைய தேவைகளையும் அவர் பார்த்துக் கொள்வார்” என்று நிச்சயமாக கூறியிருப்பான். எவ்வளவாக யோசேப்பின் கூற்றுக்கு நான் ‘ஆமென்’ என்று உரக்கச் சொல்ல விரும்புகிறேன்! 20. மரியாள் வீட்டிற்கு வந்து, ஒரு சுருளை எடுத்து, வழக்கமான அவர்களுடைய ஞாயிறு பிற்பகல் வேதாகமப் பாடத்திற்காக அதை வெளியே எடுத்தாள். அன்றையதினம் அவள் வெளியே எடுத்து கொண்டு வந்த சுருளானது ஏசாயா புஸ்தக சுருளாயிருந்தது. அதை விரித்து மரியாளுக்கு வாசித்து அதன் கருத்தை கூறும் நோக்கில், அவன் அந்த புஸ்தக சுருளை எடுத்து பிரித்தான். இறுதியில் அவன் ஏசாயா புஸ்தகம் 9:6-க்கு வந்தான், -- “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” அவன் அதை வாசித்து கொண்டிருக்கையில், பெருமூச்சின் சத்தத்தைக் கேட்டு, திரும்பி பார்த்தான்; அவனுடைய இனிய இதயமாகிய அந்த சிறு பெண்மணியினுடைய முகம் பிரகாசமடைந்து, இருளான இரவில் காணப்படும் நட்சத்திரங்களைப் போல அவளுடைய கண்கள் பளபளக்கும் நிலையில் அவள், “அன்பே, மீண்டும் அதைப் படியுங்கள்” என்றாள். அவன் அதை மீண்டும் படித்தான். அவள், “அது யாராக இருக்கக்கூடும்? தீர்க்கதரிசி எதைக் குறித்துப் பேசுகிறார்?” என்று நிச்சயமாக கேட்டிருப்பாள். அதற்கு அவன், “தீர்க்கதரிசி வரப்போகிற மேசியாவைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார், மேலும், என்றாவது ஒரு நாள் நமது ஸ்திரீகளில் ஒருவர் மேசியாவைப் பெற்றெடுப்பாள்” என்று கூறியிருப்பான் அல்லது அதைப் போன்று கூறியிருப்பான். அந்த வேத வாக்கியம் அந்த சிறு கன்னியை பற்றிப்பிடித்தது போல காணப்பட்டது; அவளால் அதை விட்டு வெளியேற முடியவில்லை. 21. அன்றுக் காலையில், தண்ணீர் எடுக்கும்படியாக கிணற்றுக்குச் செல்லும் வழியில், ஒருவேளை அந்தக் காரியங்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பவளாக நாம் அவளைக் காண்கிறோம். அது திங்கட்கிழமையாக இருக்கலாம் என்று நான் கூறுவேன். அது சலவை செய்யும் நாளாக இருந்தது, எனவே, அவள் நேரமே சென்று சலவை செய்யும் படியாக தண்ணீரைப் பெற வேண்டியதாயிருந்தது; அவளது தாயார் வயது சென்றவளாய் இருந்தாள். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” என்ற வேதவாக்கியத்தை நினைத்துக் கொண்டே இருந்த அவள், அந்த மூலையில் திரும்ப வேண்டும் என்பதை மறந்து போகும் அளவிற்கு, அவ்வளவாக அவள் யோசித்துக் கொண்டிருந்தாள் அல்லது அவளுக்கு கூறப்பட்ட காரியத்தில் அவள் ஆர்வம் கொண்டிருந்தாள். அவள் தன் தலையை உயர்த்திப் பார்த்த போது, அங்கே ஒரு விசித்திரமான காரியம் இருந்தது, ஒரு ஒளிவெள்ளம் வந்ததை போல காணப்பட்டது. இன்றைக்கும் இருக்கின்றதான அந்த கன்னியின் கிணறு (மரியாளின் கிணறு) என்று அழைக்கப்படும், பட்டண சதுக்கத்தில் உள்ள அந்த கிணற்றை நோக்கி அவள் திரும்பினாள். “ஓ! மலையின் மேல் இருக்கும் பனியில் சூரிய ஒளி பிரதிபலிக்கிறது அல்லது மெருகேற்றப்பட்ட ஏதோ ஒரு உலோகத்தில் பட்டு பிரதிபலிக்கிறது அல்லது ரோமப் போர்ச் சேவகனின் கேடயமாக இருக்கலாம்; அதைத்தான் ஒருவேளை என் கண்களுக்கு முன்பாக மின்னுவதாகக் கண்டேன்” என்று அவள் நிச்சயம் நினைத்திருப்பாள். எனவே, தனது ஆழ்ந்த யோசனைக்குள் தொடர்ந்து சென்றாள். 22. ஓ! நாம் செய்வதை விட அதிகமாக இன்றைக்கு சபையானது ஆவிக்குள்ளாக நடக்காமலிருப்பது மிகவும் மோசமான காரியமாயிருக்கிறது. ஏனென்றால் இது, தேவன் உங்களிடம் வருவதற்கான அப்படிப்பட்டதான ஒரு நேரத்தைப் போல இருக்கிறது. கிலெயோப்பா என்பவனும் அவனது நண்பனும் எம்மாவூருக்கு போகும் வழியில் இயேசுவைப் பற்றி பேசிக் கொண்டும், சம்பாஷித்துக் கொண்டும் செல்கையில், அவர்கள் அருகே இருந்த புதர்களினூடாக நடந்து, அவர்களோடே கூட அவர் நடந்து சென்றார். நாம் அவர் மீது சிந்தையுள்ளவர்களாயிருக்கையில்... இன்றைக்கு உலகத்திலுள்ள தொல்லை என்னவெனில், அவரைத் தவிர மற்றெல்லாவற்றையும் குறித்து நாம் சிந்திக்கிறோம். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் அத்தி மரத்தின் கீழாக இருந்த போது, நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தபடி, சிந்திக்கத் துவங்கினேன். அங்கே அவர் வந்து என்னுடைய புதிய ஊழியத்தைக் குறித்து அறிவித்தது அதுவே முதன்முறையாக இருந்தது. அவர் மேல் சிந்தை வையுங்கள். கர்த்தர், “என்னிடத்தில் சேருங்கள், அப்பொழுது நான் உங்களிடம் சேருவேன்” என்றார். அவர் மேல் சிந்தையாயிருங்கள். தாவீது இவ்விதம் கூறினான்... கட்டில் தாங்கியில் (bed post) அவருடைய கட்டளைகளை எழுதிவைத்து, இரவும் பகலும் அதன்மேல் தியானமாயிருந்தான். அதைத் தான் சபையானது செய்ய வேண்டும், உங்களது இருதயத்தை இரவும் பகலும் தேவனோடு ஒத்திசைந்திருக்குமாறு வைத்திருக்க வேண்டும், ஏனெனில், அப்பொழுது தான் அவர் காட்சி தருவார். சாலொமோன், “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” என்றான். நீங்கள் அவருடைய பிள்ளைகளில் ஒருவர், அவர் உங்களை இரட்சித்தார், அவர் உங்களுக்கு நல்லவராக இருக்கிறார், மேலும், அவர் உங்களை நேசிக்கிறார் என்று சிந்திக்கத் தொடங்குங்கள். சபைக்குப் போகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம், அல்லது உகந்த மணிநேரம் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம்; எல்லா நேரங்களிலும் அவரை சிந்தையில் கொண்டிருங்கள். லூக். 24:13-35, யாக். 4:8, சங். 1:2, நீதி. 23:7 23. அவள் வீதியில் நடந்து கொண்டே சென்ற பொழுது, வீதியில் ஒருவரும் காணப்படவில்லை. பக்கவாட்டிலுள்ள சிறிய அழுக்கான பாதையில் அவள் நடந்து வந்த போது, திடீரென்று தன்னை சுற்றி ஏதோவொன்று இருப்பதை உணர்ந்தாள், உண்மையாகவே அது ஒரு விசித்திரமான உணர்வாக இருந்தது. ஓ, அது மிகவும் அற்புதமான அனுபவம். அதைப் போன்ற நேரங்களை இங்கிருக்கிற ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்றால், அதை துவக்குவதற்கான நல்ல இரவு இதுவே. வெறுமனே அவரைக் குறித்து சிந்திக்க துவங்கி, உங்களுடைய இருதயத்தில் அவரை ஆராதனை செய்யுங்கள், அப்பொழுதே, உங்களைச் சுற்றி பரிசுத்த ஆவியின் நெருங்கிய ஐக்கியத்தை உணருவீர்கள். அது நீங்கள் தாங்க முடியாத அளவிற்கு அவ்வளவாக அபிஷேகிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்கள் மற்றும் - அல்லது ஏதோவொன்றை செய்வீர்கள். அது வரும்போது நீங்கள் அமைதியாக தரித்திருக்க முடியாது. 24. அவள் சிந்தித்துக் கொண்டே, தன்னைச் சுற்றி யார் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், ஒருவேளை அந்த சிறிய பெண்மணி தனது பாதங்களில் ஒரு ஜோடி பாதரட்சைகளை அணிந்தவளாய், இந்த அழுக்கான பாதையில் நடந்து கொண்டு போயிருக்கலாம், ஆனால், அவளோ கர்த்தரைப் பற்றியும், நிகழப் போகின்றதான அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் தன் தலையை நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த உணர்வானது திடீரென்று அவளை அவ்வளவாய் ஆட்கொண்டது. அவள் நிமிர்ந்து பார்த்த போது, அவளுக்கு முன்பாக ஒரு வெளிச்சம் நின்று கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் பக்கத்தில், பிரதான தூதனாகிய காபிரியேல் நின்று கொண்டிருந்தான். தேவதூதர்கள் உங்களுக்கு காட்சி கொடுக்க வேண்டுமென்றால், தேவனை உங்கள் சிந்தையில் வைத்து, உலகத்தின் காரியங்களை விட்டு விலகி இருங்கள். வேலைக்குச் செல்லுங்கள்; சபைக்குச் செல்லுங்கள்; பாத்திரம் துலக்கச் செல்லுங்கள்; நீங்கள் எங்கே இருந்தாலும், பகல் முழுதும், இரா முழுதும் அவர் மேல் சிந்தையாயிருங்கள். அப்பொழுது தேவன் ஏதோவொன்றைச் செய்வார். அவருக்கு நெருக்கமாக நீங்கள் இழுக்கப்படுகிறீர்கள். நீங்கள் உலகத்தின் பக்கத்தை அடைத்து விட்டீர்கள்; நீங்களும் அவரும் மாத்திரம் ஒன்றாக இருக்கிறீர்கள். 25. தேவதூதன் தோன்றின காட்சியானது அந்த சிறிய கன்னியை பயமுறச் செய்தது. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்பதாக அவள் போதிக்கப் பட்டிருந்தாள். ஆனால், ஏதோ ஒன்று நடப்பதை அவள் கண்டாள். தேவதூதன் அவளிடம், “மரியாளே வாழ்க!” என்று வாழ்த்தினான். ‘Hail’ என்பதற்கு ‘நிறுத்துதல் (to stop)’ என்று பொருள். (தமிழ் வேதாகமத்தில் ‘hail’ என்பதற்கு ‘வாழ்க’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது – மொழி.). ஒரு தேவதூதன் வரும்போது, அவர் உங்களுக்காக ஒரு செய்தியைக் கொண்டிருப்பார். தேவனுடைய தூதனாகிய பரிசுத்த ஆவியானவர், ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு செய்தியை உடையவராயிருக்கிறார். அவரை உங்கள் சிந்தையில் கொண்டிருங்கள். அவருடைய வாக்குத்தத்தங்களைக் குறித்தும், அவர் எவ்வளவு அன்பானவர் என்றும், அவர் எவ்வளவு இனிமையானவர் என்றும் அவரைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் வியாதியாயிருந்தால், ‘என்னுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், எனக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறேன்’ என்பதை உங்கள் சிந்தையில் வையுங்கள். அதை மையமாகக் கொண்டே உங்கள் சிந்தை இருக்கட்டும்; ஏதோவொன்று உங்களுக்கு சம்பவிக்கும். உடனடியாக, ஏதோவொன்று உங்களருகில் சேர்ந்து, ஒரு அபிஷேகமானது உங்கள் மீது கடந்து வரும், நீங்கள் அந்த இருக்கையை விட்டே வெளியே போய்விடுவீர்கள். “கர்த்தரிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” ஏசா. 53:5, லூக். 1:28, யாக். 4:8 26. அவள் அந்த மகத்தான தூதனை நோக்கிப் பார்த்தாள், அவன் பெயர் காபிரியேல். இப்பொழுது, கர்த்தருடைய தூதர்கள் இருக்கிறார்கள், அநேகர் இருக்கிறார்கள், அவர்கள் பூமிக்கு வந்து செய்திகளைக் கொண்டு வருவார்கள். ஆனால், காபிரியேல் வரும்போதோ, ஏதோ ஒரு பெரிய காரியம் சம்பவிக்க இருக்கும். கிறிஸ்துவின் முதல் வருகையை அறிவித்தவன் அவனே; கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறிவிப்பவனும் அவனே. அவன் மரியாளிடம், “நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்” என்றான். அவளிடம் கொண்டு வருவதற்கான எப்பேர்ப்பட்ட ஒரு செய்தி அது! “நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்.” அந்த வேதவாக்கியத்தை அவள் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அதே வேதவாக்கியம் தான் அவளிடம் உறுதிப் படுத்தப்பட்டது. இப்பொழுது, நீங்கள் வியாதியாயிருந்தால், அந்த வேதவாக்கியத்தை சிந்தியுங்கள். நீங்கள் இழக்கப் பட்டிருப்பீர்களானால், அந்த வேதவாக்கியத்தை சிந்தியுங்கள். உங்களுக்கு பரிசுத்த ஆவி வேண்டுமென்றால், அந்த வேதவாக்கியத்தை சிந்தியுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு உறுதிப்படுத்துவார். லூக். 1:30 27. அவள் ஒரு குமாரனைப் பெறப் போவதாக தூதன் அவளிடம் கூறினான். அங்கே தான் அவளுக்கான காரியம். அவர்கள் அவரை இயேசு என்று அழைக்கப் போகிறார்கள். ஜனங்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர் இரட்சிக்கப் போகிறார். அவன் அவளிடம், “உன் இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள், மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்” என்றான். இப்பொழுது மரியாளும் எலிசபெத்தும் முதல் ஒன்றுவிட்ட சகோதரிகள் (first cousins). நம்முடைய கர்த்தரும் யோவான் ஸ்நானகனும் இரண்டாவது ஒன்றுவிட்ட சகோதரர்கள் (second cousins). எலிசபெத்தின் கணவன் பெயர் சகரியா. அவன் ஒரு நீதிமான், தேவாலயத்தில் ஆசாரியானாயிருந்தான். அவன் ஒரு நல்ல மனிதன். எலிசபெத்தோடு விவாகம் பண்ணப்பட்ட நாள் முதல் தன் ஜீவிய காலமெல்லாம், தேவன் அவனுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தரும்படி, அவன் ஜெபிக்கிறவனாகவும், தேவனைச் சார்ந்தும் இருந்துவந்தான். அவளோ மலடியாயிருந்தாள். அவள் ஏறத்தாழ அறுபது வயது நிரம்பியவளாக இருந்தாள், சகரியா எழுபதுகளில் இருந்தான், இன்னும் அவர்களுக்கு பிள்ளையில்லாதிருந்தது. சகரியா தன் வகுப்பின் முறைமையின்படி தூபங்காட்டும்படி தன் வேலையைச் செய்ய உள்ளே சென்றான், ஜனங்கள் வெளியே கூட்டமாய் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவன் பார்த்தபோது, தூபபீடத்தின் வலது பக்கத்திலே பிரதான தூதனாகிய காபிரியேல் நின்று கொண்டிருந்தான். சரியாக ஜீவியுங்கள்; சரியானதை செய்யுங்கள்; தூதர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்; தேவன் அவர்களை இன்னும் தமது கட்டளையில் வைத்திருக்கிறார். அங்கே, பிரதான தூதனாகிய காபிரியேல் நின்று கொண்டு, நிகழப் போவதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தான். தேவாலயத்தில் அவனது முறைமையின் நாட்கள் நிறைவடைந்து வீட்டிற்கு செல்வதையும், அவனுடைய மனைவி கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறப்போவதையும் கூறிக் கொண்டிருந்தான். அவர்கள் அவனை யோவான் என்றழைத்தனர். அந்தக் காரியங்களை நாம் அறிவோம். மத். 1:21; லூக். 1:9-13,31,36 28. இப்பொழுது, தூதனாகிய காபிரியேல், ஆறு மாதம் கழித்து மரியாளைச் சந்தித்து அவளது இனத்தாள், ஒரு பிள்ளையைப் பெறப் போவதாகக் கூறினான். எனவே, மரியாளுக்கு அது ஒரு அற்புதம் என்பது தெரியும், அந்த வயதான பெண்மணி, தனது முதுமையில் ஒரு பிள்ளையைப் பெறுவது என்பது ஒரு அற்புதம் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால் அவள் தூதனிடம், “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” என்றாள். கேளுங்கள், அப்பொழுது பெற்றுக் கொள்வீர்கள். அதற்கு அவன், “பரிசுத்த ஆவி உன்மேல் நிழலிடும். உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்றான். அவ்வாறுதான் அது நடைபெறப் போகிறது. மரியாள் தூதனுக்கு மறுஉத்தரவு எதையும் கொடுக்கவில்லை. சொல்லப்பட்ட ஒரேயொரு காரியமானது, “இதோ, நான் கர்த்தருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது.” சகரியாவும் கூட சந்தேகித்தான் என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா? வயோதிப மனிதனாக, அவளும் வயதானவளாக இருக்கையில், இது எப்படியாகும் என சந்தேகித்தான். வார்த்தையை அறிந்திருக்க வேண்டிய ஆசாரியன், தேவன் செய்தவைகளை அறிந்திருக்க வேண்டிய ஆசாரியன்... ஆனால், இந்த சிறு கன்னியோ, அவள் ஒரு குழந்தைப் பெண்ணாக இருந்தாள். அவள் புருஷனை இன்னும் அறியாதவளாயிருந்தாள். முடியாத ஒன்றை, முன்னர் இது போன்று நிகழாத ஒன்றை அவள் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவள் தர்க்கம் பண்ணவில்லை; மேற்கொண்டு எந்த சந்தேகத்தையும் கேட்கவில்லை. அவருடைய வார்த்தையே அவளுக்கு போதுமானதாக இருந்தது. லூக். 1:7,34-38; யோ. 16:24 29. ஓ, சபை மாத்திரம் அது போன்றதை பெற்றுக்கொள்ளுமானால். வார்த்தை அதை தீர்த்து வைக்கிறது. தேவன் அதை கூறியிருப்பாரென்றால், நாம் அறிய வேண்டியது அது மாத்திரமே. அது எப்படி சம்பவிக்கும்? என்னால் சொல்ல முடியாது. ஆனால் தேவன் அவ்விதம் கூறியிருப்பாரென்றால், அது அந்த விதமாகத் தான் இருக்கப் போகிறது, ஏனெனில், தேவன் அவ்விதம் கூறியிருக்கிறார். ஓ, அதைத்தான் சபையானது அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன். உங்களை விசுவாசத்தில் மூழ்கச் செய்ய வேண்டும் என்ற ஒரு காரியம் இருக்குமானால், அது தேவன் என்ன சொன்னாரோ அதில் தான் உள்ளது; அது சத்தியமானதாக இருக்க வேண்டும். அவள் சாத்தியமற்றக் காரியங்களை விசுவாசிக்க வேண்டியிருந்தது என்பதை கவனித்தீர்களா? சகரியா பின்னிட்டதைப் போல அவள் பின்னடையவில்லை. அவள் பின்னாக சாராளிடம் சென்றிருக்கக் கூடும். சாராள் பிள்ளை பெறும்போது, கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கியிருந்தாள். மேலும் தேவாலயத்தில் அன்னாள், அவளும் வயது சென்றவளாயிருந்தாள். அவர்களுக்கு அநேக முன்மாதிரிகள் இருந்தன. ஆனால், மரியாளுக்கோ இதுவரை சம்பவித்திராத ஒன்றை விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. 30. உங்களுக்கு ஆயிரக்கணக்கில் தெய்வீக சுகமளித்தலின் முன்மாதிரிகள் உள்ளன. புற்றுநோய், குருடு, செவிடு, ஊமை, எல்லா வகையான வியாதிகள் மற்றும் நோய்களிலிருந்தும் சுகமடைந்த ஜனங்களை நோக்கிப் பாருங்கள். மாதிரியாக காண்பதற்கு அதைப் போன்ற அநேகம் நமக்கு உண்டு. ஆனால், இந்த சிறு பிள்ளைக்கோ அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே இல்லை, மேலும் அதுவே அவளுக்கு போதுமானதாகவும் இருந்தது. அவருடைய வார்த்தையே அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்தது. மேலும், இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; நடக்கிற காரியங்கள் உறுதியாகும் வரை அவள் காத்திருக்கவில்லை. அப்பொழுதே அவள் அதைக் குறித்து சாட்சி பகர ஆரம்பித்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெறப் போகிறாள் என்பதற்கான உறுதிப்பாடு வரும்வரை, ஜீவனை உணரும்வரை அவள் காத்திருக்கவில்லை. அவள் அவருடைய வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், அவருடைய வார்த்தையில் அவரை எடுத்துக் கொண்டாள். மேலும், அவள் எதையும் உணருவதற்கு முன்பே அவள் சாட்சி பகர்ந்து, அந்த குழந்தைக்காக தேவனை ஸ்தோத்தரிக்க ஆரம்பித்தாள். அதுதான்... தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, எதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் தேவனை ஸ்தோத்தரிக்கக் கூடிய அநேக மரியாள்களை எங்களுக்குத் தாரும். அவரை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்கிற யாரோ ஒருவரை தேவன் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. யாரோ ஒருவர், “நல்லது, நான் எந்த ஒரு முன்னேற்றத்தையும் உணரவில்லை. நான் கூட்டங்களுக்குச் சென்றேன்; எனக்காக ஜெபிக்கப்பட்டது...” என்று கூறலாம். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. தேவன் அவ்விதம் சொன்னார், அது அதை தீர்த்து வைக்கும். ஆமென். யாரோ ஒருவர் தேவனுடைய வார்த்தையை எடுக்கும் போது, அதுவே அவரைப் பிரியப்படுத்துகிறது. அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். அதுதான் தேவனை பிரியப்படுத்துகிறதாயிருக்கிறது. அவருடன் தயவாயிருக்கும்படி நீங்கள் காணக்கூடிய ஒரே ஒரு வழி, அவருடைய வார்த்தையை விசுவாசிப்பது மாத்திரமே. 31. மரியாள் அவருடைய வார்த்தையில் அவரை எடுத்துக் கொண்டாள். அவள், “அதுவே எனக்குப் போதுமானது” என்றாள். ஒரு அறிகுறி கூட இல்லாத நிலையில், எந்த ஒரு அறிகுறியும் பெறுவதற்கு முன்பாகவே, அவள் ஒவ்வொருவரிடமும் தான் அந்த குழந்தையைப் பெறப் போவதாக சொல்லிக் கொண்டே சென்றாள். அது நடைபெறப் போகிறது என்பதை அவள் அறிந்திருந்தாள், ஏனெனில், தேவன் அவ்விதம் சொல்லி இருக்கிறார். உண்மையான ஆபிரகாமின் வித்தை நீங்கள் காண முடியவில்லையா? தேவன் உரைக்கிறார்; அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். அதினிமித்தமே இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்கிற சபையை நான் விரும்புகிறேன். தேவன், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று சொல்லும் போது, சபையானது, “ஆமென்” என்கிறது. இயேசு, “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று சொல்லும்போது, சபையானது, “ஆமென்” என்கிறது. இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; என் நாமத்தினால் நீங்கள் பிசாசுகளைத் துரத்துவீர்கள்; பாஷைகளைப் பேசுவீர்கள்; சர்ப்பங்களை எடுப்பீர்கள்; சாவுக்கேதுவானவைகளை குடிப்பீர்கள்... வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பீர்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்றார். சபையானது, “ஆமென்” என்கிறது. அதைக் குறித்து அவர்கள் கவலைப்பட மாட்டார்கள், அது எப்படி நிகழப் போகிறது என்று ஆச்சரியப்படமாட்டார்கள்; அவரை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து செல்வார்கள். அதுதான் உண்மையான ஆபிரகாமின் வித்து. அவர்களே தேவனுடைய பிள்ளைகள். மாற். 16:17,18; யோ. 14:12; எபி. 13:8 32. மரியாள் சாத்தியமற்ற காரியங்களை விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால், தேவனோ சாத்தியமற்ற காரியங்களை எடுத்து, அவருடைய வார்த்தையில் அவரை எடுக்கும்போது, அவைகளை சாத்தியமாக்குகிறார் (real). ஒருவேளை மருத்துவர், “இனிமேல் உன்னால் நடக்க முடியாது. நல்லது, நீ அதை செய்வதற்கு அது -- அது சாத்தியமற்றது” என்று கூறியிருக்கலாம். ஆனால், தேவன் அவருடைய வார்த்தையில் எடுக்கப்படும் போது, சாத்தியமற்றதன் காரியங்கள் மங்கிப் போய்விடும். மருத்துவர் என்ன கூறியிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, மருத்துவர் தன்னால் முடிந்த சிறந்ததை செய்கிறார், ஆனால் தேவன் தேவனே. ஆமென். அவர் எப்படியோ, அவருடைய வார்த்தையும் அப்படியே இருக்கிறது. அவருடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; அது அதை என்றென்றைக்கும் தீர்த்து வைக்கிறது. “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்.” தேவன் அவருடைய வார்த்தையில்... மத். 17:20,21:21; மாற். 11:23 33. ஓ, அவள் புருஷனை அறிவதற்கு முன்பே, தேவனை ஸ்தோத்தரிக்க ஆரம்பித்து, தான் ஒரு குழந்தையைப் பெறப் போவதாக ஜனங்களிடம் கூற ஆரம்பித்தாள். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், விமர்சிக்கத்தக்கதாக அவள் தன்னைத் தானே உட்படுத்திக் கொண்டாள் அல்லது நிந்தைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தாள். ஆனால் மரியாளோ, விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு அவள் நின்றுவிடவில்லை; அவள் தூஷணத்தை பொருட்படுத்தவில்லை. ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வரும்போது, உன் அயலகத்தார் என்ன கூறுவார்கள் என்பதில் நீ அக்கறை செலுத்தாதே. நீ தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்டாய். அது நடந்து முடிந்த காரியம். நீ எவ்வளவு கூச்சலிட்டாலும், அந்நிய பாஷைகளில் பேசினாலும் அல்லது நீ எதைச் செய்தாலும் அதைக் குறித்து கவலைப்பட மாட்டாய். நிந்தனையைக் குறித்து நீ கவலைப்பட மாட்டாய். பிசாசினால் உண்டாக்கப்பட்ட, வீட்டிலே உண்டாக்கப்பட்ட, அறிவாற்றலான சமுதாயம் என்று அழைக்கப்படுகிற உன்னுடைய எல்லா கவுரவத்தையும் நீ ஒழித்து விட்டாய். உனக்கு தேவையெல்லாம் தேவனிடத்தில் தயை பெறுவதே. பரிசுத்த ஆவியானவர் உன்னை செய்ய வைக்கிற எதைக் குறித்தும் -- சத்தமிடுவது, கூச்சலிடுவது, அழுவது, உரக்க அழுவது (bawl) அல்லது எதுவாயினும், நீ அதைக் குறித்து கவலைப்பட மாட்டாய். பரிசுத்த ஆவியானவர் உன் மேல் எதை வைக்கிறாரோ, நீ அதைச் செய்கிறாய், ஏனெனில் வேறெதையும் நீ கருத்தில் கொள்வதில்லை. மனிதனால் உண்டாக்கப்பட்ட அனைத்து காரியங்களையும் நீ இழந்து விட்டாய். கிறிஸ்து இயேசுவுக்குள் நீ விடுதலையாயிருக்கிறாய். தேவனுடைய ஆவியானவர் உன்னை விடுதலையாக்கி இருக்கிறார். தேவனுடைய வல்லமையில் சுதந்திரமாயிருந்து, அவருடைய அழகில் நீங்கள் கழுவப்பட்டு, ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்கிறீர்கள். நீங்கள் ஒரு சுதந்திரமான நபராயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டீர்கள். அது உங்கள் இருதயத்தைப் பற்றிப் பிடித்திருக்கிறது. நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்; உங்களை நீங்களே விட்டெறிந்து... நீங்கள், “நல்லது, நான் வேலை செய்யும் ஸ்தலத்தில் ஒருவேளை என்னுடைய அதிகாரி என்னிடம், ‘நீ அந்த உருளும்-பரிசுத்தர் கூட்டங்களுக்குச் சென்று சுகமடைந்ததாக கேள்விப்பட்டேனே’ என்று சொல்லிவிடுவாரோ என அச்சப்படுகிறேன்” என்று கூறலாம். இல்லை, நீங்கள் அச்சப்பட மாட்டீர்கள். சகோதரனே, நீங்கள் ஆபிரகாமின் வித்தாயிருந்தால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையைக் குறித்து சாட்சி பகருவதற்காக நிற்பதை நீங்கள் மகிழ்ச்சியாக எண்ணுவீர்கள். நிச்சயமாக அதைச் செய்வீர்கள். கர்த்தராகிய இயேசு, “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் பிதாவின் முன்னிலையிலும் பரிசுத்த தூதர்களின் முன்னிலையிலும் வெட்கப்படுவார்” என்று கூறினார். எனவே, அவர்கள் வெட்கப்படுவதில்லை; அவர்கள் பயப்படுவதில்லை. யோ. 4:24, 2-கொரி. 3:17, லூக். 9:26, யோவே. 2:26, மாற். 8:38 34. எலிசபெத்தைக் குறித்ததான நற்செய்தியைக் கேள்விப்பட்ட மரியாள், ஓ, அவள் அந்தச் செய்தியை பகிர விரும்பினாள். இதைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தை நீங்கள் அறிவீர்களா, அதாவது, நீங்கள் உண்மையாகவே தேவனை அவருடைய வாக்குத்தத்தத்தில் எடுத்துக் கொண்டு, அவர் அதை நிறைவேற்றுவதைக் காணும்போது, அதை யாரிடமாவது அறிவிக்க விரும்புவீர்கள். உங்களால் அமைதியாக இருக்க முடியாது; நீங்கள் அதைக் குறித்து ஏதோ ஒன்றை செய்துதான் ஆக வேண்டும். எனவே அந்த இளம் பெண், தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு, ஆற்றினூடாக, மலைமேலுள்ள யூதேயாவிற்கு, மலைநாட்டிற்குச் சென்றாள். இப்பொழுது, எலிசபெத் தான் தாயாகப் போகிறோம் என்பதை அறிந்தவுடனே அவள் தன்னை ஒளித்துக் கொண்டு, அறையிலேயே தங்கி விட்டாள். நான் அதை கற்பனை செய்கிறேன். அவள் அங்கேயே தரித்திருந்து ஒருவேளை வரவிருக்கின்றதான அந்த சிறிய குழந்தைக்குத் தேவையான சிறிய காலுறை மற்றும் அவளால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பதை நாம் சற்று எண்ணிப் பார்ப்போம். அவனை பிரதிஷ்டை செய்வதற்காக போர்வையையும், மற்றும் அதற்குண்டான அனைத்துக் காரியங்களையும் செய்து, ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள், ஏனெனில், அவள் ஒரு தாயாக ஆகப் போகிறாள். 35. ஆனால், அந்தக் காரியமானது அவளை கவலை கொள்ளச் செய்தது. அது அவளுக்கு ஆறாவது மாதமாக இருந்தது, இருப்பினும், குழந்தையானது அசைவற்ற நிலையில் இருந்தது. இப்பொழுது, அது ஒரு சாதாரண விஷயம் அல்ல என்பதை எவருமே அறிவர். இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அதிகபட்சம் நான்கு மாதங்களில் அங்கே ஜீவன் இருக்கும், ஆனால் இங்கேயோ ஜீவன் இல்லை. நாம் அதை சற்று கவனித்து, பாதையின் ஓரத்தில் இருக்கையை போட்டு, அதில் அமர்ந்து நடப்பதை கவனிப்போம். இங்கே அந்த சிறு கன்னிப்பெண் பாதையில் வருகிறாள். அவளது கண்கள் மின்னுகின்றன, அவளது கன்னங்கள் மிகவும் சிவப்பாயிருக்கின்றன. நிச்சயமாக மேக்ஸ் ஃபேக்டர் அல்ல (Max Factor – முக அழகு சாதன நிறுவனம் – மொழி.). இல்லை, இல்லை. ஆனால், அது தேவனைப் பற்றியதான சந்தோஷத்தினாலும், தேவனுடைய வல்லமையினாலும் ஒளியூட்டப்பட்டது. அவளால் முடிந்தவரை ஓடினாள், அவளது சிறிய கண்கள் பிரகாசிக்கிறது. அவள்... அங்கே எலிசபெத் அந்த திரையை நீக்கி வெளியே பார்ப்பதை நான் காண்கிறேன். ஒரு இளம் ஸ்திரீ யூதேயாவின் மலைகளில் வருவதை அவள் காண்கிறாள். அவள் அருகாமையில் வந்த போது, அவள் தனது இனத்தாளாகிய மரியாள் என்பதை அவள் கண்டுகொண்டாள். எனவே, அவள் ஒரு சால்வையை தன்னை சுற்றி போர்த்திக் கொண்டு, அவளை சந்திக்கும்படி வெளியே செல்கிறாள். ஓ, நிச்சயமாக அவள் மரியாள் மீது தன் கரங்களைப் போட்டு, அவளைக் கட்டித்தழுவி, அவளை முத்தம் செய்திருக்க வேண்டும். ஜனங்கள் வழக்கமாக அதைச் செய்வார்கள், ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்விதம் செய்வதில்லை. ஒருவருக்காக ஒருவர் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஒருவரை விட்டு ஒருவர் அவ்வளவாக விலகியிருந்து, மிகவும் குளிர்ந்த நிலையில் உள்ளனர். வழக்கமாக யாராவது அண்டை வீட்டார் சுகவீனப்பட்டால், நாமெல்லாரும் சென்று அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு மரங்களை வெட்டிக் கொடுத்து, அவர்களுடைய சோளங்களை (corn) அறுத்துக் கொடுத்து, உழவு செய்ய உதவி செய்து, நடந்து கொண்டிருக்கிற காரியங்களில் நாம் அவர்களுக்கு உதவுவோம். ஆனால் இன்றைக்கோ, அண்டை வீட்டார் மரித்துப் போவதைக் கூட செய்தித்தாள்களின் மூலமே நாம் அறிந்து கொள்கிறோம். இது மிகவும் குளிர்ந்த நிலை, மிகவும் அலட்சியம். 36. இங்கே அமர்ந்திருக்கும் என் மனைவியிடம் – தேனே, மோசமாயிருக்க வேண்டுமென்று நான் இதைக் கூறவில்லை. சிறிது காலம் இருக்கும், அன்றொரு நாள், நாங்கள் நகரத்திற்குச் சென்றிருந்தோம். அது ஒரு நடைமுறைப் போக்கு (trend - டிரெண்டிங்) போல் தென்பட்டது. அங்கே, அந்த வீதியில் ஒரு சீமாட்டி இருந்தாள். அவள், “சகோதரி பிரன்ஹாமே, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவள் ஒரு வார்த்தை கூட பதிலாகக் கூறுவதை நான் கேட்கவில்லை. எனவே நான், “தேனே, அந்த ஸ்திரீ உன்னிடம் தான் கேட்டாள்” என்றேன். அதற்கு அவள், “நான் அவளிடம் பேசிவிட்டேன்” என்றாள். “நீ பேசினதை நான் கேட்கவே இல்லையே” என்றேன். அதற்கு அவள், “நான் புன்னகை செய்தேன்” என்றாள். “ஓ, தேனே, ஒரு சிறிய புன்னகையானது, எப்படி இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு சற்றும் பதிலாகாது” என்றேன். நான் -- நான் -- நான் நட்பின் அடிப்படையில் கூறுகிறேன், ஆனால் ஒரு சிறிய புன்னகை... நான் மற்றவர்கள் பேச வேண்டும் என்றே விரும்புவேன், ஒப்போசம் (opossum – ஒப்போசம் என்ற விலங்கு – மொழி.) போல இளிக்க வேண்டும் என நான் விரும்ப மாட்டேன். “எப்படி இருக்கிறீர்கள்” என்பது ஒரு உண்மையானதாக இருக்கும்படியே விரும்புவேன். கரங்களை அசைத்து ஒரு நல்ல கைக்குலுக்குவதையே நான் விரும்புகிறேன். 37. புளோரிடாவில் (Florida) சிறிது காலத்திற்கு முன்பு, அங்கே ஒரு அரச குல சீமாட்டி (Duchess) இருந்தாள் அல்லது அது போன்று ஒன்று, நாங்கள் கூடாரம் அமைத்த ஸ்தலத்திலே, ஒரு இடத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்பதாக இருந்தது. அன்றிரவு சகோதரர் பாஸ்வொர்த், “அந்த அரச குல சீமாட்டி” என்றார். “இப்பொழுது, யாரை நான் சந்திக்கப் போகிறேன்?” என நினைத்தேன். “அவள் அங்கே இருக்கிறாள்; உங்களை சந்திக்க விரும்புகிறாள்” என்று சொல்லப்பட்டது. அப்பொழுது நான், “நல்லது, இங்கேயும் என்னை சந்திக்கும்படி அநேக வியாதியஸ்தர்கள் இருக்கிறார்களே” என்றேன். அதற்கு அவர், “வெளியே போகும்போது வெறுமனே அவளுடன் கரம் குலுக்கிச் செல்லுங்கள்” என்றார். மகத்தான பெரிய ஸ்திரீ. அவள் ஒரு ஜோடி கண்ணாடியை வைத்திருந்தாள், அது அந்த குச்சியின் மீது இருந்தது. அவள் அந்த குச்சியின் மீது இருந்த கண்ணாடியை இந்தவிதமாக பிடித்திருந்தாள். நான் அருகில் சென்ற போது அவள், “நீர் தான் டாக்டர் பிரன்ஹாமா?” என்று கேட்டாள். நான், “இல்லை பெருமாட்டியே, இல்லை பெருமாட்டியே. நான் சகோதரன் பிரன்ஹாம்” என்றேன். ஒரு மிஷனரியை உலகத்தை சுற்றி நூறு முறை அனுப்புவதற்கு போதுமான அளவிற்கு அவள் தனது கரங்களில் அவ்வளவான நகைகளையும், கைக்காப்புகளையும் அணிந்திருந்தாள். “நான் சகோதரன் பிரன்ஹாம்” என்று கூறினேன். அவள் தனது கரங்களை நீட்டி, “நான் உங்களை சந்திப்பதில் பரவசமடைகிறேன்” என்றாள். நான் அவளுடைய பெரிய தடிமனான கரங்களைப் பிடித்து, பின்னர் விட்டு விட்டேன். நான், “இதை இங்கேயே விட்டுவிடுங்கள், நான் உங்களை மீண்டும் சந்திக்கும்போது, உங்களை அறிந்து கொள்கிறேன்” என்றேன். அவ்வாறு அணிவதை நான் அதிகமாக வெறுக்கிறேன். எப்படியாயினும் நாம் என்னவாய் இருக்கிறோம், ஆறு அடி உள்ள மண்ணாயிருக்கிறோம். தேவன் பார்ப்பது அதிலுள்ள ஆத்துமாவையே. நகைகள் பாவங்களை மூடாது. உடைகள் பாவங்களை மூடாது. பாவத்தை மூடுவது இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. பின்னர் அவர் நாம் என்னவாய் இருக்கிறோமோ அவ்விதம் நம்மை உருவாக்குகிறார். பின்னர் நம்முடைய இருதயங்களில்... 38. மரியாள் எலிசபெத்தை பற்றிக்கொண்டு, எலிசபெத்தும் மரியாளும் ஒருவரையொருவர் தட்டிக் கொடுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு, ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டனர். தாங்கள் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். என்னே ஒரு நட்பு. இறுதியில் அவர்கள் விடுபட்டு கரங்களை பற்றி கொண்டதை விடுத்து, விலகி, பின்னர் பேசுவதை என்னால் காண முடிகிறது. எலிசபெத்து, “மரியாளே, நான் உன்னை பல வருடங்களாக காணவில்லை, இருப்பினும் உன்னுடைய தாய் ஆன்னே (Ann) அவர்களிடமிருந்து, அந்த அழகான கண்களை நான் இன்னும் அறிந்திருக்கிறேனே. ஓ, நீ அவ்வளவான ஒரு அழகான பிள்ளையாய் இருக்கிறாய். எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “ஓ, நான் நன்றாக இருக்கிறேன். நான் அருமையாக உணருகிறேன், நீங்கள் தாயாக ஆகப் போகிறீர்கள் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றாள். “ஓ, அது சரிதான், நானும் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்றாள். பின்னர் மரியாள், “உங்களுக்கு ஒன்று தெரியுமா? நானும் தாயாக போகிறேன்” என்றாள். “ஓ, உனக்கும் யோசேப்புக்கும் திருமணம் ஆகிவிட்டதா?” “இல்லை, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, மேலும், நான் தாயாகப் போகிறேன்.” “நல்லது, ஆனால் அது எனக்கு புரியவில்லை. இப்பொழுது, என்னுடைய குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது, அது இன்னும் ஜீவனைப் பெறவில்லை, எனவே, நான் சற்று கவலையாய் இருக்கிறேன்.” அதற்கு மரியாள், “ஓ, கவலைப்பட வேண்டாம், ஏனெனில், வழியில் தேவதூதன் என்னிடம் தோன்றி இதைக் குறித்து கூறினார். (பாருங்கள்?). நான் எந்த மனிதனையும் அறியவில்லை, ஆனால், பரிசுத்த ஆவியானவர் என்மீது நிழலிட்டார், நான் ஒரு குழந்தையைப் பெறப் போகிறேன். அவருடைய பெயரை நான் ‘இயேசு’ என்று அழைக்கப் போகிறேன்; அவர் தேவனுடைய குமாரனாய் இருப்பார்” என்றாள். அவள் “இயேசு” என்று உச்சரித்த உடனேயே, சிறிய யோவானுக்குள் ஜீவன் பிரவேசித்து, சந்தோஷத்தினால் தன்னால் முடிந்தவரை அவன் துள்ளினான். எலிசபெத்து தன்னுடைய முகம் பிரகாசிக்க, “என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. ஏனெனில், அவருடைய நாமம் என் காதில் உரைக்கப்பட்ட உடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய் துள்ளிற்று” என்றாள். லூக். 1:41-44 39. இயேசு கிறிஸ்துவின் நாமம் மனித உதடுகளில் முதன்முறையாக உச்சரிக்கப்பட்ட போது, மரித்த குழந்தைக்கு ஜீவனைக் கொண்டு வந்ததென்றால், மரியாளின் கருவிற்குள் (எலிசபெத்தின் கருவிற்குள் – மொழி.) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் நித்திய ஜீவனையும் கொண்டு வந்ததென்றால், ஏனெனில், யோவான் ஸ்நானகன் எலிசபெத்தின் வயிற்றில் பிறக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டவனாக இருந்தான் என்று வேதம் கூறுகிறது. [ஒலிநாடாவில் காலியிடம் – ஆசி.] ஓ, அது நிச்சயமாக வியாதியஸ்தரை குணப்படுத்தி, குஷ்டரோகிகளை சொஸ்தப்படுத்தி, மரித்தோரை உயிரடையச் செய்யும். “என் நாமத்தினால் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்.” அல்லேலூயா. அந்த அற்புதமான இயேசு கிறிஸ்துவின் நாமமானது இன்றிரவு நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நம்முடைய கரங்களில் இருக்கிறது. அது அதை செய்தது என்றால், அங்கே நடந்ததை சற்று சிந்தியுங்கள், தேவ ஆவியானவர் அந்த இரண்டு ஸ்திரீகளுக்கிடையே கிரியை செய்வதை நான் காண்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமமானது அவர்கள் மத்தியில் அழைக்கப்பட்ட போது, ஒருவர் மற்றவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார், மற்றொருவரும் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஓ, என்னே, சகோதரனே, அதே இயேசு கிறிஸ்துவின் நாமமானது இன்றிரவும் அதிக வல்லமையுள்ளதாய் இருக்கிறது. அது இன்றிரவு ஜனங்கள் மத்தியில் நிச்சயம் இருக்க வேண்டும். அவருடைய சொந்த வாக்குத்தத்தமானது, தேவனுக்கு முன்பாக பரலோகத்தில், இங்கே அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கிற பரிசுத்த ஆவியானவரில் நன்மையானதை நடப்பிக்கும் படி நங்கூரமிட்டிருக்கும் போது, அது வியாதியாயுள்ள ஒரு மனிதனுக்கோ அல்லது வியாதியாயுள்ள ஒரு ஸ்திரீக்கோ எதை நடப்பிக்க வேண்டும்? அது பிசாசினால் கட்டப்பட்ட ஒரு மனிதனுக்கு என்னத்தை நடப்பிக்க வேண்டும்? “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்”. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் ஜெபிப்போம். மாற். 16:17-18, லூக். 1:15 40. பரலோகப் பிதாவே, எங்களுடைய இருதயங்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது, இன்றிரவு நாங்கள் எடுக்கப்படக்கூடும் என்று உணருகிறோம். மகத்தான இயேசு கிறிஸ்துவின் நாமத்தை, சிறப்பு வாய்ந்த அந்த நாமத்தை, அந்த விலையேறப் பெற்ற நாமத்தை, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை, வானோர், பூதலத்தோர், எல்லாரும் வணங்கத்தக்க, ஓ தேவனே, எல்லா பிசாசுகளும் அதற்கு தலை வணங்கி அங்கீகரிக்கத்தக்கதான நாமத்தை அறிந்தவர்களாய், நீர் இந்த பழைய கட்டிடத்தின் மேற்கூரையை அப்படியே உயர்த்த, நாங்கள் இன்றிரவு எங்கள் வீட்டிற்கு செல்வோம் என்பது போல தென்படுகிறது. அந்த நாமத்தை நீர் எங்களுக்கு தந்தருளும். “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, அதைச் செய்வேன்.” ஓ, கர்த்தராகிய தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக வாக்குத்தத்தம் செய்தவரே, இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் நாமமானது ஒவ்வொரு வியாதியஸ்தரையும் விடுவிக்கட்டும். ஒவ்வொரு பாவியையும் விடுவிக்கட்டும். ஒவ்வொரு நபரையும் விடுவிக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து அசைவாடத்தக்க, இந்தக் கூட்டமானது இப்பொழுது ஒரு விடுதலையின் கூட்டமாக இருப்பதாக. தேவனுக்கு மகிமை செலுத்தி ஸ்தோத்தரியுங்கள். இதை அருளும், கர்த்தாவே. பிலி. 2:10-11; யோ. 14:13,14 41. நாங்கள் உம்முடைய ஜனங்களாயிருக்கிறோம்; நாங்கள் எந்த -- எந்த அடிமைத் தனத்திற்கும் கீழாக இல்லை. நாங்கள் விடுதலையாயிருக்கிறோம். குமாரன் எங்களை விடுதலையாக்கியிருக்கிறார், நாங்கள் மெய்யாகவே எங்கள் கர்த்தரை, எங்கள் பிதாவை சேவிக்க விடுதலையாயிருக்கிறோம். நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். விடுதலையை முன்னிட்டு நன்றி கூறும் நாளைக் குறித்து பேசும் போது, நாங்கள் பெற்றிருப்பது ஒரு உண்மையான... ஒவ்வொரு நாளும் நன்றி கூறும் நாளே (thanksgiving day); ஒவ்வொரு மணியும் நன்றி கூறும் நாளே. நான் குருடாயிருந்தேன், இப்பொழுதோ காண்கிறேன்; பாவியாயிருந்த நான் இப்பொழுது இரட்சிக்கப்பட்டேன். ஓ தேவனே, நாங்கள் எவ்வளவாய் விடுதலையாய் இருக்கிறோம், எவ்வாறு நாங்கள் உமக்கு நன்றி செலுத்தப் போகிறோம். தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தவராயில்லை, ஆனால், இன்றிரவு எங்கள் மத்தியில் ஜீவிக்கிறார், அவருடைய தோன்றுதலுக்கு சற்று முன்பாக இந்தக் கடைசி நாட்களில் அவருடைய சபையில் பரிசுத்த ஆவியை ஊற்றுகிறார், அடையாளங்கள், அதிசயங்கள், அற்புதங்கள் மூலம் தம்மை ஜீவிக்கிறவராக நிரூபிக்கிறார் என்று எங்கள் இருதயத்திலிருந்து நாங்கள் நன்றி செலுத்துகிறோம். எவ்விடத்திலும் அற்புதங்களும் அடையாளங்களும் தோன்றுகின்றன, அருமையான காரியங்கள்... பரலோகத்தின் தேவன்... ஓ, அல்லேலூயா, ஸ்தோத்திரத்தையும் மகிமையையும் தேவனுக்கு செலுத்துங்கள். ஓ, நாங்கள் எவ்வளவாய் இதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்கள் இருதயத்தில் இது ஒரு உண்மையான நன்றி செலுத்துதலாய் இருக்கிறது. கர்த்தாவே, உம்முடைய ஜனங்களின் துதியை ஏற்றுக் கொள்ளும். தேவனே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். உம்மை தேடுகிறவர்களுக்கு நீர் பலன் அளிக்கிறவர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். யோ. 8:36, எபி. 11:6 42. பிதாவாகிய தேவனே, பாவிகளை இரட்சியும்; பின்வாங்கிப் போனவர்களை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வாரும்; விசுவாசிகளை பரிசுத்த ஆவியினால் நிரப்பியருளும். நெருக்கப்பட்டோரையும், வியாதியஸ்தரையும் சுகமாக்கும். உமக்கு மகிமையை பெற்றுக் கொள்ளும். ஏதோ ஒன்று அசைவாடுவதை நாங்கள் உணருகிறோம். கடந்த சில வருடங்களாக ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது, தேவ ஆவியானவர் தேசத்தினூடாக அசைவாடிக் கொண்டிருக்கிறார்; மகத்தான எழுப்புதல்களும் அடையாளங்களும் அவருடைய வருகையை காண்பிக்கிறதாயிருக்கிறது. வேறுபட்ட இடங்களில் பூமியதிர்ச்சிகள் காணப்படுகின்றன; சமுத்திரம் செய்வதறியாது, திடீரென்று ராட்சத அலைகளை வீசுகிறது. மனிதனுடைய இருதயங்கள் பயத்தினால் தோல்வியடைகிறது, நாடுகளுக்கிடையே தொல்லைகள், குழப்பமான நேரங்கள், இஸ்ரவேல் திரும்ப வருகிறது, அத்திமரம் துளிர் விடுகிறது; நாம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், நாங்கள் அவரை நேசிக்கிறோம், கர்த்தாவே, நாங்கள் அவரை ஆராதிக்கிறோம். அதே தேவனுடைய வல்லமையானது, இந்நாட்களில் ஒன்றில் எடுத்துக் கொள்ளப்படுதலில் நம்மை அவரிடம் வீட்டிற்கு கொண்டு செல்லும். மரித்தோரை உயிரடையச் செய்யும், என்றென்றுமாக. இதை அருளும், கர்த்தாவே. இன்றிரவு உம்முடைய ஜனங்கள் மத்தியில் உம்முடைய அனைத்து வாக்குத்தத்தங்களையும் நிறைவேறச் செய்யும். இந்த கைக்குட்டைகளை பிரதிநிதித்துவப் படுத்துகிற இந்த ஜனங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். உம்முடைய ஆவியானவர் கீழ்நோக்கிப் பார்ப்பாராக. அவர்கள் இதை இங்கே வைத்த போது, அவர்களை நீர் கண்டீர்; குறிக்கோளை நீர் அறிவீர்; அவர்களுடைய நோக்கத்தை நீர் அறிவீர், அவர்களுடைய விசுவாசத்தை நீர் அறிவீர். தேவனே, உம்முடைய சொந்த மகிமைக்கென்று அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சுகப்படுத்தும்படி நான் வேண்டிக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம், ஆமென். மத். 24:7,32,33; மாற். 13:8,28,29; லூக். 21:10,11 43. ஓ, அவருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. அல்லேலூயா, அல்லேலூயா. (சபையார் துதி செலுத்துகின்றனர் – மொழி.) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஓ, அவருடைய ஆசீர்வாதங்கள், அவருடைய பிரசன்னம் சிலிர்க்கச் செய்கிறது. பெரிய, மகத்தான தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் கடைசி நாட்களில் ஊற்றப்படுவார். மேலும், முன்மாரியையும் பின்மாரியையும் ஒன்றுசேர அவர் கொடுப்பார் என்ற வாக்குத்தத்தத்தை அறிவதன் மூலமாக அது என் ஆத்துமாவை குளிரப் பண்ணுகிறது. உங்களுக்கு பின்மாரி ஊற்றப்பட்டுள்ளது; இங்கே உங்களுக்கு அதனோடு கூட சேர்த்து முன்மாரியும் உள்ளது. இயேசு நடப்பித்த கிரியைகள், அவர் வருகிறார் என்பதை காண்பிக்கும்படியாக மீண்டும் சபையிலே நிகழ்ந்தேறுகிறது. நான் என்னுடைய கையை அங்கே அந்த நிழலிலிருந்து உயர்த்தியிருந்தால், தூரத்தில் அது இருண்டதாக காணப்படும். அதன் அருகில் கொண்டு செல்ல, கொண்டு செல்ல ஒரு உண்மையான கையாக அது மாறும் வரை அது அதற்கு நிகராக மாறிக் கொண்டே இருக்கும். ஆசீர்வாதங்களும் அப்படியேதான் இருக்கிறது. ஆண்டாண்டு காலங்களாக சபையானது கடந்து வந்து, தேவனுடைய வல்லமையானது கிட்ட நெருங்க நெருங்க, இயேசு கிறிஸ்துவின் சாயலை அவருடைய சபையானது அவருடைய உயர்த்தெழுதலின் வல்லமையில் இப்பொழுது வரை எடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அவர் நடப்பித்த எல்லா அடையாளங்களும் மீண்டும் சபையில் நிகழ்ந்தேறி இருக்கின்றன. நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். ஜனங்களே, தேவனைத் தேடுங்கள். யோவே. 2:23,28,29; ஓசி. 6:3 44. ஒரு பிரசங்கியாக இருப்பதற்கு நான் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறேன் என்று நீங்கள் நினைப்பதை நான் அறிவேன். இதை நான் உங்களுக்கு நிச்சயப்படுத்துகிறேன். நான் உணர்ந்த அதே வழியில் நீங்களும் உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் என்னை காட்டிலும் மோசமாக நடந்து கொள்வீர்கள். ஆம் ஐயா, அவ்வாறே நான் நம்புகிறேன். ஏனெனில், நான் அதைப் பிடித்து வைக்க முயற்சிக்கிறேன். அது என் இருதயத்தில் வெடிக்கும் நிலையில் ஆயத்தமாயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனுடைய எண்ணங்களானது, சரியாக இங்கே தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு, அவர் ஜீவிக்கிறார் என்பதை காண்பித்து, அவருடைய வார்த்தையில் இப்பொழுது நம்மிடையே உள்ளது. அவர் மரித்தவராயில்லை, அவர் என்றென்றும் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம், நாம் எவ்வளவாக அவரை போற்றுகிறோம். ஓ, எந்த பணத்தாலும் அதை வாங்க முடியாது; எதுவும் அதைப் பெற முடியாது; அது ஒவ்வொருவருக்கும் இலவசமானது. “விருப்பமுள்ளவன் வந்து கர்த்தரின் ஊற்றிலே பருகக்கடவன்.” ஓ, எதுவும் அதின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அவரே ஆதியும் அந்தமும், அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவுமானவர். ஒரு உலகம் இல்லாததற்கு முன்பே அவர் இங்கே இருந்தார். உலகம் போன பிறகும் அவர் இங்கே இருப்பார். அவரே தாவீதின் வேரும் சந்ததியுமானவர். அவரே பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், அல்லேலூயா. அவரே ஜீவிக்கிற தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. அவரே அந்த மெய்யான ஒருவர். நாம் அவரை நேசிக்கிறோம், அவரை தொழுது கொள்கிறோம். பரலோகத்தின் தேவனாகிய அவர், பிதாவின் இருதயம் (bosom), மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்தார். ஓ, நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன். நான் அவரை எவ்வளவாய் போற்றுகிறேன். யோ. 1:14; வெளி. 1:8; 22:13,16,17 45. நான், ஒரு இழக்கப்பட்ட பாவியாக, வீதிகளில் குருடனாய் தடுமாறினேன். இப்பொழுது அவர் எனக்கு நல்ல கண்களைக் கொடுத்திருக்கிறார், எனக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறார், எனக்கு இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறார், தேவனுடைய அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுத்திருக்கிறார், என்னுடைய சொந்தப் பெற்றோர்கள் நான் பைத்தியமாகி விட்டேன் என்று என்னை துரத்தின நேரத்தில், எனக்கு நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய சபையானது வாசலை விட்டு என்னைத் துரத்தி, “அவன் தன்னுடைய புத்தி சுயாதீனத்தை இழந்து விட்டான்” என்றது. ஆனால் அவரோ, “நீ விட்டுவிட்டால், நான் உனக்கு தகப்பன்மார்களையும், தாய்மார்களையும், நண்பர்களையும் கொடுப்பேன்” என்றார். அல்லேலூயா! ஓ, தேவனே, உலகம் முழுவதிலும் அவர் அதை செய்திருக்கிறார், செய்திருக்கிறார், மேலும் செய்திருக்கிறார். தீர்க்கதரிசி தாவீதிடம், “நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே” என்று கூறினதை நான் எண்ணிப் பார்க்கிறேன். அன்றிரவு, கர்த்தர் தீர்க்கதரிசியிடம் பேசி, “இப்போதும் என் தாசனாகிய தாவீதை நோக்கி: நான் உன்னை ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்,” என்று சொல்லச் சொன்னார். நான் அதை எண்ணிப் பார்க்கையில், எவ்வளவாக தேவன் என்னை பாவ சாக்கடையிலிருந்து வெளியே எடுத்து, உலகம் முழுவதும் எனக்கு நண்பர்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய மகத்தான நாமத்தை எண்ணிப் பார்க்கையில், என்னுடைய இருதயம் மெய்சிலிர்க்கிறது. கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. 2-சாமு. 7:3,8,9; 1-நாளா. 17:2,7,8; மத். 19:29 46. நான் வருத்தப்படும் ஒரே காரியம், அவரை நான் சேவிப்பதற்கு எனக்கு அதிகப்படியான ஜீவியக்காலம் இல்லை என்பதே. ஏதாவதொன்றை விட்டுவிடுவதைக் குறித்து பேசினால், ஓ, அங்கே விட்டுவிட ஒன்றுமில்லை; எல்லாவற்றையும் ஜெயிக்க வேண்டும்; எல்லாவற்றையும் ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு ஒரு கோடி ஆண்டுகள் ஜீவியக்காலம் கொடுக்கப்பட்டு அல்லது பதினாறு வயதாக மாறி உலகம் முழுவதற்கும் பத்தாயிரம் ஆண்டுகள் இராஜாவாக இருக்கும்படி கொடுக்கப்பட்டு அல்லது சரியாக இப்பொழுதே மரித்து இயேசு கிறிஸ்துவுடன் பரலோகத்திற்கு செல்லவேண்டும் என்பதாக நேரிட்டால், நான், “இப்பொழுதே நான் போக வேண்டும், அவருடன் இருக்கும்படி நான் போவதையே விரும்புவேன்” என்றே கூறுவேன். ஏனெனில், இப்பொழுது நான் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறேன். பத்தாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டால், நான் நரகத்திற்குச் சென்றுவிடுவேன். ஆனால் இப்பொழுதோ பத்தாயிரம் ஆண்டுகள் கடக்கும்போது, நான் அங்கே பிரவேசிக்கும்போது இருந்ததைவிட அதிகமான நேரத்தை பெற்றிருப்பேன். ஆமென். என்னே, என்னே! அவரே அசலானவர். மலர்களை உண்டாக்கினவர் யார்? அவைகளில் நிறங்களை வைத்தவர் யார்? மலர்களில் நிறங்களை வைத்த அவரே தான் என் இருதயத்தில் பரிசுத்த ஆவியை வைத்தார். தேவனுக்கு மகிமை. அவர் இங்கே இருக்கிறார், ஆம் ஐயா. அவரைக் குறித்து கலக்கமடைய வேண்டாம் (don’t be alarmed), ஏனெனில் அவர் இங்கே இருக்கிறார். தேவன் என்றால் தொழுது கொள்ளுதல் என்று அர்த்தம். தேவனே தொழுகைக்குரியவர். நான் அவரை தொழுது கொள்வதை நேசிக்கிறேன். அவரே எனக்கு எல்லாமுமானவர். அவரே என் சமாதானம். அவரே என் தகப்பன், என் தாய், நான் பெற்றிருந்ததும் அவரே, பெறப்போவதும் அவரே, சகலமும் அவருக்குள் இருக்கிறது. ஓ, என்னே, நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம். 47. ஓ, கர்த்தாவே, எனக்கு வெறுமனே என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை, கர்த்தாவே, உம்முடைய பிரசன்னத்தின் ஆவி என் ஆத்துமாவை ஒவ்வொரு இடத்திலும் என்னை நிரப்புகிறது. ஓ, இன்றிரவு அது வெளிவரட்டும், அதையே நானும் கேட்டிருக்கிறேன். ஓ, அதை அருளும், கர்த்தாவே. ஓ, பிதாவாகிய தேவனே, உம்முடைய ஜனங்கள் மீது உம்முடைய ஆசீர்வாதத்தை அனுப்பியருளும். ஜனங்களை அபிஷேகியும்; பரிசுத்த ஆவியை அதிக வல்லமையுடனும், கிருபையையும் அன்பையும் அதிக அளவிலும் அனுப்பியருளும். கர்த்தாவே, இதையருளும். எங்களுடைய ஜெபங்களைக் கேட்டருளும். நாங்கள் உம்மை துதிக்கிறோம்; நாங்கள் உம்மை நேசிக்கிறோம்; உம்மிடம் எங்கள் கரங்களை உயர்த்துகிறோம்; உம்மிடம் எங்கள் இருதயங்களை உயர்த்துகிறோம். நாங்கள் இருப்பதும், எங்கள் ஜீவனும், எங்கள் ஆத்துமாவும், எங்கள் ஆகாரமும், எங்கள் தண்ணீரும் நீரே. நீரே எங்கள் ஜீவனாகவும், எங்கள் பார்வையாகவும், எங்கள் எல்லாமுமாகவும் இருக்கிறீர். கர்த்தாவே, உம்மாலே நாங்கள் சுவாசித்து ஜீவிக்கிறோம். ஓ, கர்த்தாவே, எங்களை எடுத்து, எங்களை வனைந்து, எங்களை உடுத்தி, எங்களை உலகத்திலிருந்து வெளியே எடுத்து விடும். ஓ, தேவனே, உம்முடைய ஆவியை எங்களுக்குள்ளாக வையும். நீர், “நீங்கள் ஒரு விசித்திர ஜனங்களாயும், ராஜரீக ஆசாரியத்துவம் (பெற்றவர்களாயும்), ஆவிக்குரிய வரங்களை செலுத்துகிற ஒரு ஆவிக்குரிய ஆசாரியத்துவமாக இருக்கிறீர்கள்” என்றீர். எங்கள் உதடுகளின் கனியாக, தேவனுக்கு ஸ்தோத்திரத்தை செலுத்துகிறோம். அதைத் தான் இப்பொழுது சரியாக செய்து கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, ஒரு பலியை உண்டுபண்ணி, உதடுகளை திறந்து, ஸ்தோத்தரித்து, “கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், யார் என்ன கூறினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நீரே எங்கள் தேவனாய் இருக்கிறீர்; நீரே எங்கள் இரட்சகர், எங்கள் சுகமளிப்பவர்; நீரே எங்கள் இராஜா, நீரே எங்கள் இரட்சிப்பு; நீரே எங்கள் ஜீவன்; எங்களுடைய எல்லாமுமே நீர் தான். நீரே எங்களுக்கு எல்லாமுமாய் இருக்கிறீர். நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்” என்று கூறுங்கள். கர்த்தாவே, எங்களை ஆசீர்வதியும். நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம், நீர் எங்களை வழிநடத்தும்படி உமக்காக காத்திருக்கிறோம். எங்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பும்; நீர் விரும்புகிற எதையும் எங்களைக் கொண்டு செய்யும். உம்முடைய கரங்களில் எங்களை எடுத்துக் கொள்ளும். நீரே குயவன்; நாங்கள் களிமண். கர்த்தாவே, உம்முடைய சொந்த வழியில் எங்களை வனைந்து கொள்ளும். தேவனுடைய சாயலாக எங்களை உருவாக்கும். கர்த்தாவே, இதை அருளும். அப். 17:28, 1-பேது. 2:9 48. இப்பொழுது, பிதாவாகிய தேவனே, இன்றிரவு வியாதியஸ்தரை உம்மிடம் ஒப்படைக்கும் வேளையில், அவர்கள் இந்த மேடையை கடந்து போகையில், அன்றிரவு அங்கே அந்த ஆலையில் என்னுடனே பேசின அதே தேவ தூதன், ஜீவிய பிரயாணம் முழுதும் பேசின அவர், இன்றிரவு அவர் இங்கே வரட்டும், கர்த்தாவே, அவர் வந்து நின்று, இந்த வார்த்தைகளை உறுதிப்படுத்தி, மீண்டும் இந்த வேதாகமத்தை புத்துயிர் ஆக்கட்டும். கர்த்தாவே, இதை அருளும். அது அவ்விதமே ஆகக்கடவது; அதைத் தந்தருளும். அதைக் காண்கிற ஒவ்வொரு வியாதியஸ்தரும், களிகூர்ந்து உம்மை சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளட்டும். பாவிகள் அதைக் கண்டு, களிகூர்ந்து உம்மை இரட்சகராக ஏற்றுக் கொள்ளட்டும். விசுவாசிகள் அதைக் கண்டு, களிகூர்ந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படட்டும். யோவான் பிறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, தாயின் வயிற்றில் மரித்துக் கிடந்த நிலையில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவானென்றால், இன்றிரவு எங்களுக்கு அது எவ்வளவான காரியத்தைச் செய்ய வேண்டும்! ஓ, பரிசுத்த ஆவியை அனுப்பி, உம்முடைய மகத்தான வார்த்தையை உறுதிப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி என்னை அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் ஸ்திரீகள் முதலாவது பாடட்டும், “நான் அவரை நேசிக்கிறேன்” நான் அவரை நேசிக்கிறேன் (இப்பொழுது ஆண்கள்) நான் அவரை நேசிக்கிறேன் (இப்பொழுது எல்லாருமாக) முந்தி என்னை அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 49. ஒன்றிலிருந்து எது வரை? ஒன்றிலிருந்து எது வரை? D... [அந்நிய பாஷைகளும் வியாக்கியானமும் கொடுக்கப்படுகிறது – ஆசி.] கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். கர்த்தரின் மகிழ்ச்சியே நமது பெலன், இல்லையா? அதுவே நமது பெலன்; நமது மத்தியிலுள்ள கர்த்தரின் மகிழ்ச்சியினாலேயே நாம் ஜீவிக்கிறோம். பில்லி என்னிடம், “D-1 முதல் 50 வரையிலான ஜெப அட்டைகளை விநியோகிப்பதாகக் கூறினான். யாரிடம் அட்டை D-1 உள்ளது? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஜெப அட்டை D-வரிசை எண்-1,2,3,4. உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எண்-4,5,6,7,8,9,10. இப்பொழுது, இங்கே வரிசையில் வாருங்கள். ஓ, என்னே. நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைகூடிடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைகூடிடும், நம்பிடுவாய்; 50. பரவாயில்லை, எண்-10, 11. யாரிடம் D-10 உள்ளது? D-11? அவர் ஏற்கனவே இங்கே இருக்கிறார். சரி, வரிசையின் பின்னால் வாருங்கள். D-11, D-12? யாரிடம் D-12 உள்ளது? உங்கள் மகனா? நல்லது, உங்கள் இடத்தில் வந்து நில்லுங்கள். D-12, D-13? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது. D-14. உங்கள் கரங்களை உயர்த்துங்கள். D- 14,15,16,17,18,19,20? D-20. உங்கள் கரங்களை நான் காண முடியவில்லை. நல்லது. பரவாயில்லை, அங்கே பின்னால் வரிசையில் நில்லுங்கள். கண்காணிப்பாளர்கள் முடிந்தால், அவர்கள் வரிசையை கடைபிடிக்க உதவுங்கள். அங்கே நீண்ட வரிசையை ஏற்படுத்துவோம். ஓ, நான் அருமையாக உணருகிறேன். ஆமென், ஆமென். எதற்காகவும் நான் இதை விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் பயித்தியம் என்றால், என்னைத் தனியே விட்டுவிடுங்கள். இந்த வழியில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் சொல்கின்றதாக அந்த சரியான சிந்தையில் நான் இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும் இவ்வழியில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய சரியான சிந்தையை நான் பெற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்டது – எனக்கு கிறிஸ்துவின் சிந்தை வேண்டும்; அதுதான் எனக்கு வேண்டும். அது எப்பொழுதும் உலகத்திற்கு எதிராக அமைந்துள்ளது. 51. சரி, D-20. D-21 அட்டையை வைத்திருப்பது யார்? நல்லது ஐயா, சரியாக அங்கே. 22, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 23,24,25,26,27,28,29,30. D-30 அட்டையை வைத்திருப்பது யார்? அங்கே பின்னால், சகோதரியே சரியான இடத்திற்கு வாருங்கள். பரவாயில்லை, நாம் இப்பொழுது வரிசையாக ஆரம்பிப்போம். இப்பொழுது, ஜெப அட்டையை கொண்டவர்கள், அப்படியே வைத்திருங்கள்; நீங்கள் மேடைக்கு வரப் போகின்றீர்கள். இல்லையா? நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். நாங்கள் உங்களுக்கு ஜெப அட்டைகளை வழங்குகிறோம், அதைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஓ, எவ்வளவு அற்புதமானது. D-31, D-31 அட்டையை வைத்திருப்பது யார்? அங்கே பின்னால். 32,33,34,35,36,37,38,39,40. D-1 முதல் 40 வரை. எத்தனை அட்டைகளை விநியோகிப்பதாக கூறியிருந்தான்? 50. ஜெப வரிசையில் என்ன நிகழும் என்பதை நாங்கள் அறியோம், அது முடிவடையும் அல்லது துவங்கும். அது எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதினிமித்தமே நாங்கள் அந்த எண்களின் வரிசைக் கிரமத்தில் அழைக்கிறோம், ஏனெனில் அது எங்கே இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. நல்லது, 41, D-41 அட்டையை வைத்திருப்பது யார்? அங்கே. 42? சரி. 43,44,45, 45? நான் காணவில்லை. சரி. 46, இங்கே வாருங்கள். 47,48,49,50. எண்-50 அட்டையை வைத்திருப்பது யார்? சரி. எத்தனை அட்டைகளை விநியோக்கிப்பதாக கூறியிருந்தான்? 50, அவ்வளவுதான் என யூகிக்கிறேன். 52. இப்பொழுது, ஜெப அட்டைகள் இங்கொன்றும் அங்கொன்றும் உள்ளது. அவைகளில் சில அங்கே இருக்கலாம். எல்லாருக்காகவும் நாம் ஜெபிக்கலாம், நம்மால் ஜெபிக்க முடியாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வரிசையில் நிற்கட்டும், அது அவர்களுக்கு உதவியாயிருக்கும். எனவே, நீங்கள் ஜெப அட்டைகளை ஒருவருக்கு வழங்கும்போது, அப்பொழுதே அவர் எண்பது சதவிகித சுகத்தைப் பெற்று விடுகிறார்கள். பையன்கள் ஜெப அட்டைகளை வழங்கும்போது அவர்கள், “ஹா” என்று சொல்வதாக கூறுகின்றனர். (சகோ. பிரன்ஹாம் வாயைத் திறந்து சத்தமில்லாமல் “ஹா...” என்று சொல்கிறார் – மொழி.) அது -- அது ஏதோ ஒன்றைச் செய்கிறது, (பாருங்கள்?) அவர்களை விசுவாசிக்கும்படிச் செய்கிறது. எல்லாம் சரி, இப்பொழுது அவர்கள் சிதறி இருக்கிறார்கள். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், இந்த ஆராதனைக் கூட்டங்கள் முடியும் முன்பதாக, நாங்கள் கட்டிடத்தில் உள்ள எல்லா ஜெப அட்டைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களை மேடைக்கு அழைக்கும் இரவு அவர்களுக்கு அமையப் போகிறது. இப்பொழுது, எத்தனை பேர்கள் ஜெப அட்டைகளைப் பெறாதவர்களாயிருந்து, வியாதியாயும், தேவன் உங்களை சுகப்படுத்த வேண்டும் என்றிருக்கிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி, வெறுமனே விசுவாசியுங்கள். நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் அது மாத்திரமே. ஒரு நிமிடத்திற்குள்ளாக அவர்களை வரிசையில் நிற்க வைக்க முடியுமா? நாங்கள் அவர்களை வரிசைக்கு ஆயத்தப்படுத்த முற்படுகையில், இப்பொழுது நாம் முனகி (hum) பாடி எளிதாக்குவோம். 53. இப்பொழுது, முதன்முறையாக இங்கே வந்துள்ளவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? ஓ, என்னே. நன்றி. பாருங்கள். ஒரே முறை ஒரே இரவில் அனைவரும் வந்திருக்கலாம். என்னுடைய கூட்டங்கள் ஒன்றில் கூட இதற்கு முன் பங்கேற்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? உங்கள் கரங்களைக் காணட்டும். நல்லது, அங்கே பாருங்கள்! நீங்கள் இங்கிருப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். இன்னும் சற்று கூடுதலாக நான் செல்ல வேண்டியிருக்கலாம். நான் இன்றிரவு ஏதோவொன்றை செய்யலாம் என என் இருதயத்தில் நோக்கங்கொண்டுள்ளேன். ஜெப வரிசையை அப்படியே வரவழைத்து அவர்களுக்காக ஜெபிக்கலாம் என என் இருதயத்தில் நோக்கங்கொண்டேன். அவ்வாறு செய்யலாம் என எண்ணம் கொண்டிருந்தேன், அதினிமித்தமே வரிசையை அழைத்தேன். ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்வீர்களென்றால், புதிதாக வந்தவர்களுக்கு நான் இதைக் குறித்து சற்று விளக்கிக்கூற வேண்டியிருக்கும். 54. பாருங்கள், நாம் கடைசி நாட்களில் ஜீவிக்கிறோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இயேசு இந்த பூமியின் மேல் இருந்தபோது, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்” என்று வாக்கு பண்ணினார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர், “இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடு கூட இருப்பேன்” என்றார். இப்பொழுது, இயேசு வெகு காலத்திற்கு முன்பு எப்படி இருந்தார், என்னென்ன கிரியைகளை நடப்பித்தார் என்று காண்போமாகில், இப்போதும் அவர் அதேக் கிரியைகளை நடப்பிக்கிறார் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும். புதிதாக வந்திருக்கிறவர்களே, அது சரிதானே? இப்பொழுது, நாம் சற்று நேரம் அவர் செய்த கிரியைகளைக் குறித்துப் பார்ப்போம். சற்று சிந்திப்போம். அவர் தன்னை சுகமளிப்பவர் என்று அழைத்துக் கொண்டாரா? இல்லை. தான் சுகமளிப்பதாக உரிமை கோரிக் கொண்டாரா? இல்லை. அவர், “கிரியை செய்வது நானல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பிதாவே கிரியை செய்கிறார்” என்றார். அது சரியா? மத். 28:20; யோ. 14:10,12,19 55. அவர் அந்த பெதஸ்தா குளத்தை கடந்து -- குளத்தின் வழியாக சென்ற போது, அங்கே அநேக மக்கள் முடவர்களாகவும், சப்பாணிகளாகவும், குருடராகவும், சூம்பின உறுப்புடையவர்களாகவும், தண்ணீர் கலக்கப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களாகவும் இருந்தனர். மேலும் இயேசு... இல்லை, அங்கே ஒரு மனிதன் கிடத்தப் பட்டிருந்தான். அவன் குருடனல்ல, அவனால் நடக்க முடியும். ஆனால், அவனுக்கு ஒருவித இனப்பெருக்க மண்டல சுரப்பி கோளாறு (prostate) அல்லது -- அல்லது காசநோய் சம்பந்தப்பட்ட நோயாக (tubercular) இருக்கலாம். சரியான வளர்ச்சியில்லாதிருந்தது (it was retarded). அவனுக்கு அது முப்பத்தெட்டு வருடங்களாக இருக்கிறதென்று நம்புகிறேன். அது அவனை கொல்லப் போவதில்லை. அவன் ஒரு படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். அவன், “நீர் என்னை சுகப்படுத்துவீரா?” என்றான். மேலும் அவன், “ஐயா, என்னை தண்ணீரில் கொண்டுபோய் விடுவதற்கு ஒருவரும் இல்லை” என்றான். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவன் வெகுகாலமாய் அப்படி இருக்கிறான் என்பதை இயேசு அறிந்திருந்தார். இப்பொழுது, அவர் அதை அறிந்திருந்தார். இப்பொழுது, அவர் அவனை சொஸ்தப்படுத்தி, அங்கே கிடத்தப்பட்டிருக்கிற ஜனங்களை விட்டுச் சென்றார். அது சரிதானே? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதைச் செய்தாரா? அவர் செய்தார். பின்னர் அவர் கேள்விக்குள்ளானார். அதற்கு அவர் என்ன பதிலுரைத்தார்? இப்பொழுது, அது யோவான் 5:19; இப்பொழுது அவருடைய வார்த்தையை கவனியுங்கள், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்றார். 56. அது உண்மையா என்று நாம் பின்னால் சென்று பார்ப்போம். அவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பின்பு... ஏனெனில், மேசியா அபிஷேகிக்கப்பட்டவராக இருப்பார், சகோதரனே, அது சரிதானே? அபிஷேகிக்கப்பட்ட ஒருவர். அவர் மனிதனாக இருந்தார், அது மனிதனிடம் வருகிறது. நம்மைப் போல அவரும் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராயிருந்தார். பிறந்தார், சாப்பிட்டார், பருகினார். ஆனால் அவருடைய இரத்தமானது... அவர் ஒரு யூதனும் அல்ல; புறஜாதியும் அல்ல. அவர் தேவனாயிருந்தார். பாருங்கள்? ஆண்பாலிடம் இருந்து இரத்தம் வருகிறது, எத்தனை பேருக்கு அது தெரியும்? அவர் தன் தாயின் இரத்தவழி அல்ல. அவள் யூதகுலத்தை சேர்ந்தவள். மேலும் அவருடைய பிதா யார்? அவருடைய பிதா யார்? தேவனே. அப்படியானால் தேவனுக்கு இரத்தம் இருக்க முடியாது, ஏனெனில் தேவன் ஆவியாயிருக்கிறார். ஆனால், ஒரு பரிசுத்தமான இரத்த அணுவை (virgin blood cell) தேவன் மரியாளின் கர்ப்பத்தில் சிருஷ்டித்தார். பாலுணர்ச்சியின்றி அது கிறிஸ்து இயேசுவாகிய குமாரனை கொண்டு வந்தது. அந்த இரத்தத்தினால்தான் நான் பரிசுத்தமாக்கப்பட்டேன். அந்த இரத்தத்தின் மூலமாக ஒரு பாவி சுத்தமாகிறான். அந்த இரத்தத்தின் மூலமாகவே இங்கே, இந்த சுகமளித்தலுக்கான விசுவாசத்தை நான் பெற்றிருக்கிறேன். அந்த இரத்தத்தின் மூலமாக என்னுடைய ஜீவியம் மாற்றப்படுகிறது. அதுவே அந்த இரத்தம். 57. அவர் முப்பது வயதாயிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவர் மேல் இறங்கி வந்தார். அவர் தனது முதலாவது ஊழியத்தை ஆரம்பித்தார். “நான் செய்கிற கிரயைகளை...,” அவர் என்ன செய்தார் என்று பார்ப்போம். அவர் செய்த முதல் காரியமாக நாம் காண்பது, அங்கே ஒருவன் இருந்தான், அந்திரேயா என்பவன் பேதுருவைக் கண்டு, அவன் சீமோன், அவனை இயேசுவினிடம் கூட்டிக் கொண்டு வந்தான். இயேசு அவனிடம், “உன் பெயர் சீமோன், உன் தகப்பன் பெயர் யோனா. நீ யோனாவின் குமாரன்” என்றார். அது சரியா? அவர் செய்த முதல் காரியம்... சீமோன், அவன் பரிசேயக் குழுவைச் சார்ந்த ஒரு பரிசேயனாயிருந்தான். வேதாகமத்தின் வரலாற்றுப் பதிவிலிருந்து சீமோன் ஒரு பரிசேயன் என்று நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம். எனவே, “ஒரு தீர்க்கதரிசி எழும்புவான்” என்று உரைக்கப்பட்டபடியே, ஒரு தீர்க்கதிரிசி எழும்புவதைக் குறித்து அவன் கற்பிக்கப்பட்டிருப்பான். மேசியா என்பவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்” என்று மோசே கூறினான். அவர் ஒரு தீர்க்கதரிசியான தேவனாக இருக்க வேண்டும். அவனைப் பார்த்தவுடன், அவன் யார் என்பதை அறிந்து, அவனை அடையாளம் கண்டு கொண்டார். யோ. 1:41,42; யோ. 14:12; உபா. 18:15 58. பின்னர், பிலிப்பு எனப்பட்ட ஒருவன் பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள மலைகளை சுற்றியுள்ள ஒரு நாட்டிற்குச் சென்று, அங்கே நாத்தான்வேல் என்று அழைக்கப்பட்ட தனது நண்பனைச் சந்தித்தான். அவன் ஒரு மரத்தின் கீழாக ஜெபித்துக் கொண்டிருந்தான். அவனிடம், “வந்துபார், யோசேப்பின் குமாரனாகிய, நாசரேத்தூரானாகிய இயேசுவைக் கண்டோம்” என்றான். அதற்கு அவன், “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமோ” என்றான். அதற்கு ஒரு மிகச் சிறந்த பதிலை அவன் கொடுத்தான் என்று நான் நினைக்கிறேன். “வந்து பார்” என்று சொன்னான். அங்கேயே இருந்து கொண்டு, வெறுமனே குறைகூற வேண்டாம்; வந்து உங்களுக்கானதை கண்டு கொள்ளுங்கள். அவர்கள் மலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த போது, “அன்றொரு நாள் நீ மீன்களை வாங்கி வந்தாயே, அந்த மீனவன், இரசீதில் கையெழுத்து கூட இடத் தெரியவில்லை, எதுவுமே அறியாத, தன் கையெழுத்து கூட போடத் தெரியாத அந்த மீனவன்” என்று பேசிக் கொள்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. “ஓ, ஆமாம். சீமோன், நீ அந்த மீனவனைக் குறித்து, அந்த பெரிய மீனவனைக் குறித்து தானே பேசுகிறாய், அப்படித்தானே.” “மேசியாவாக இருக்க வேண்டும் என நாம் சொல்லுகிற அவரிடம் அவன் வந்திருந்தான். அவன் பெயர் என்ன, அவன் தகப்பன் பெயர் என்ன என்பதைக் கூட அவர் கூறிவிட்டார்.” “ஆ, மேலே சொல், உன் புத்தி குழம்பிவிட்டது (you’ve gone off the deep end)” என்று நாத்தான்வேல் கூறினான். யோ. 1:45-46 59. ஆனால், அவன் அந்த ஜனக்கூட்டத்திற்கு முன் சென்றடைந்த உடனே, இதைப் போன்று, இயேசு ஒருவேளை வியாதியஸ்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்திருப்பார். அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அவன் வருவதைக் கண்ட அவர், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். ஏன், அது அவனை தரையில் நிற்க முடியாமல் செய்தது. அவன் இஸ்ரவேலன் என்று எப்படி அவருக்கு தெரிந்திருந்தது? அவனது உடையை வைத்து அல்ல, ஏனெனில் எல்லா கிழக்கத்தியவர்களும் ஒன்றுபோல் உடையணிவார்கள்: அங்கியும், தலைப்பாகையும். அவர், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். வேறுவிதமாகக் கூறினால், ஒரு -- ஒரு உத்தமன், ஒரு கிறிஸ்தவன், ஒரு உண்மையான விசுவாசி, நாம் அவனை அப்படி அழைக்கலாம். அவன், “ரபீ (போதகர் என்று அர்த்தம்), நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். அதற்கு அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்றார். அவன், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். அதற்கு இயேசு, “அதை உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்றார். யோ.1:47-50 60. நிச்சயமாக அங்கே நின்றிருந்தவர்கள், “இப்பொழுது, இந்த மனிதன்...” நடக்கிறவைகளை அவர்களால் மறுக்க முடியவில்லை, இருப்பினும் அவர்கள், “அவர் ஒரு பெயல்செபூல்” என்றார்கள். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? பெயல்செபூல் என்பவன் ஒரு குறிசொல்பவன், ஒரு பிசாசு. “பிசாசின் வல்லமையினாலே அவன் அதைச் செய்கிறான்.” அப்பொழுது இயேசு, “அதற்காக நான் உங்களை மன்னிக்கிறேன், நான் செய்த அதேக் கிரியைகளை செய்யும்படி ஒருநாள் பரிசுத்த ஆவியானவர் வருவார், அவருக்கு விரோதமாகப் பேசப்படும் ஒரு வார்த்தைகூட இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை” என்றார். ஏனெனில், அவர்கள் தேவனுடைய ஆவியை அசுத்தமானதாக அழைத்தனர். வேதம் அதைக் கூறுகிறது. மத். 12:24,31,32; மாற். 3:22,28-30; லூக். 11:15,12:10 61. இப்பொழுது, நாம் அநேகக் காரியங்களைக் காண்கிறோம். அவர் சமாரியா வரை சென்றார். அது மற்றொரு தேசமாயிருந்தது. வேறொரு மனித இனம். காம், சேம், யாபேத்தின் மக்களைப் போல. இப்பொழுது, நாம் சமாரியரைக் குறித்துப் பார்க்கிறோம். அவர்கள் பாதி இஸ்ரவேலும், பாதி புறஜாதியும் கலந்தவர்கள். ஒரு ஸ்திரீ கிணற்றண்டையில் இருந்தாள், அவர் அவளிடம் சில நிமிடங்கள் உரையாடினார். அவர், “தாகத்துக்குத் தா” என்றார். அவள், “கிணறும் ஆழமாயிருக்கிறதே, நீர் யூதனாயிருக்க, ஒரு சமாரியனிடம் இவ்விதம் கேட்பது வழக்கமல்லவே. நாங்கள் ஒருவரோடொருவர் சம்பந்தங்கலவாதவர்கள்” என்றாள். இவ்விதமாக அவர்கள் உரையாடல் தொடர்ந்து செல்ல, இறுதியில் அவர், “உன் புருஷனை அழைத்து வா” என்றார். அவள் அழைத்து வரும்படி செல்ல... அவள், “ஏன், எனக்கு புருஷன் இல்லை, மேலும்...” என்றாள். யோ. 4:7,9,16,17 62. அங்கே பின்னால் யாராவது சுகவீனமாக இருக்கிறார்களா? பரவாயில்லை, அவளை அங்கேயே உட்கார வையுங்கள்; வெறுமனே இருக்க வையுங்கள். இப்பொழுது, அவள் மீது கரங்களை வைத்துள்ளது ஒரு ஊழியக்காரனா? உங்கள் கரங்களை அவள் மீது வையுங்கள். கர்த்தராகிய தேவனே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அந்த சகோதரியிடமிருந்து வியாதி என்னும் பிசாசை எடுத்துப் போடும். தேவனுடைய வல்லமையானது அவளுடைய சரீரத்தை சுகமாக்கட்டும். நாங்கள் விசுவாசத்தினால் அதைத் துரத்துகிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். சரி, சந்தேகிக்க வேண்டாம். இப்பொழுது எல்லாமே சரியாகிவிடும். ஆமென். யோ. 4:8-31 63. எனவே அந்த ஸ்திரீயானவள் வந்து, “நான் பெற்றிருப்பது...” அவர், “போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா,” என்றார். அதற்கு அவள், “எனக்குப் புருஷன் இல்லை,” என்றாள். அவர், “ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்” என்றார். அவள் என்ன சொன்னாள், “ஐயா, நான்...” இப்பொழுது, இதைக் கவனியுங்கள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.” எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? “...என்று காண்கிறேன்.” அந்த மேற்கோளை நீங்கள் கவனித்தால், வரவேண்டிய தீர்க்கதரிசி அவர்தான் என்று அர்த்தமாகிறது. “நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்” என்றாள். அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அப்பொழுது இருந்த மேசியாவின் அதே அடையாளம்தான் இன்றைக்கும் இருக்கும். அது சரியா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரென்றால், அது அவ்விதமே இருக்க வேண்டும். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” யோ. 4:16-19,25,26; 14:12; எபி. 13:8 64. இப்பொழுது, இந்த பெண்மணிக்கு காற்றோட்டம் தேவைப்பட்டால், அவள் சுகவீனமாய் இருக்கிறாள், ஒரு வித மயக்கமாயிருக்கிறாள், அவளுக்கு தேவையென்றால் காற்றோட்டமான இடத்தில் அவளைக் கொண்டு செல்லுங்கள். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், அவள் சரியாகிவிடுவாள். அவளைத் தனியே விட்டுவிடுங்கள். நல்லது. இப்பொழுது, இந்த வழியில் உங்களது கவனத்தை செலுத்துங்கள், நான் அந்த வரிசைக்கு நேராக சென்று உங்களுக்காக வரிசையாக ஜெபிக்கும்படி இருந்தேன், நான் அதைச் செய்தால், நீங்கள் சுகமடைவீர்கள் என்று எத்தனை பேர் விசுவாசிப்பீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், ஏனெனில், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் கைகளை வைப்பார்கள்...” இந்தக் கட்டிடத்தில் நான் இதைப் பற்றி ஒன்றையும் அறிந்திருக்கவில்லை என்கிற அந்நியர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எங்கிலும். நான் இதைப் பற்றி ஒன்றையும் அறிந்திருக்கவில்லை. பரவாயில்லை. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருந்தால்... மாற். 16:17-18 65. இங்கே, புதிதாய் வந்த உங்களுக்கு நான் அந்நியனாய் இருக்கிறேனா? நல்லது, இப்பொழுது இந்த ஒருவர் அல்லது யாராவது எங்காவது இந்த வரிசையில் உள்ளவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், நாங்கள் இதை நிறுத்திவிடுவோம். நான் இந்த மனிதனை அறியேன்; அவரை நான் பார்த்ததேயில்லை, அவர் எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்று ஒரு துளியும் நான் அறியேன். தேவன் அறிவார். இப்பொழுது இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால், நான் அவரைப் பற்றிய சத்தியத்தைக் கூறியிருந்தால், அவர் உயிர்த்தெழுந்திருந்தால், “சோதோமின் நாட்களில் நடந்தது போல...” என்று அவர் உரைத்ததைப் போல, அவர் வாக்கு பண்ணின கடைசி அடையாளம் இதுவே என்றால்... சோதோமின் நாட்களில் தேவன் அதையே செய்தார். அதை புரிந்துகொள்ளும்படி எத்தனை பேர் இந்த வாரம் இங்கே இருந்திருக்கிறீர்கள்? தேவன் சோதோமுக்கு கொடுத்த அதே அடையாளம் தான் அது. மேலும் இயேசு, வருகைக்கு சற்று முன்பாக அதேக் காரியம் மீண்டும் நிகழும் என்றார். வேதம் அதைக் கூறுகிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? தூதன் பின்புறமாக திரும்பி இருக்கையில், “ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்றார். அவர் யார் என்பதை அவன் எப்படி கண்டு கொண்டான்? “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அவளுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அவர் கூறினார். அவளோ கூடாரத்தில் நகைத்தாள். அவர், “அவள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். பாருங்கள், கடைசி நாட்களில் அது மீண்டும் நடக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். ஆதி. 18:9,12,13; லூக். 17:28,30 66. நான் இந்த மனிதனை அறியேன், இவரைக் கண்டதில்லை. ஆனால், இங்கே நமது ஆண்டவரும், சீமோனும் சந்தித்ததைப் போன்ற நிகழ்ச்சி உள்ளது. அது சரியே. அதைப் போன்றது. நல்லது, நாம் அந்நியர்களாயிருக்கிறோம். இப்பொழுது, மனிதன் மதநம்பிக்கை அற்றவனாயிருக்கலாம்; நயவஞ்சகனாக இருக்கலாம்; ஒரு கிறிஸ்தவனாக இருக்கலாம். அவன் வியாதியாயிருக்கக் கூடும்; அவன் தேவையுள்ளவனாக இருக்கக் கூடும். நான் -- நான் அறியேன். அவனுக்கு பணத் தேவைகள் இருக்கலாம். அவனுடைய தேவை என்ன என்று எனக்குத் தெரியாது. ஒரு மனிதன் இங்கே நின்று கொண்டிருக்கிறார். புதிதாக வந்தவர்களுக்கும், இந்த மனிதனுக்கும், இங்கே என்னுடைய கரம் இருக்கிறது, எனக்குத் தெரிந்து என் வாழ்நாளில் நான் இவரைக் கண்டதில்லை. அவருக்கும் என்னைத் தெரியாது, எனக்கும் அவரைத் தெரியாது என்பதைத் தெரிவிக்க அவரும் தன் கரங்களை உயர்த்தியிருக்கிறார். அது சரிதானே, ஐயா? அது சரிதான். ஜனங்கள் காணத்தக்கதாக உம்முடைய கரத்தை உயர்த்தும், நல்லது. இங்கே இரண்டு புருஷர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பி இருப்பாரானால்... இப்பொழுது, இந்த மனிதன் சுகவீனமாயிருந்து, அவருக்கு சுகமளித்தல் தேவைப்படும் பட்சத்தில், என்னால் அதைச் செய்ய இயலாது. ஏனெனில், எந்த மீட்பின் ஆசீர்வாதத்திற்கான (கிரயமானது), அது ஏற்கனவே செலுத்தப் பட்டாயிற்று, அதற்காகவே இயேசு மரித்தார். இப்பொழுது, கிறிஸ்து இங்கே இருப்பாரானால், அவரால் உங்களிடம் பேசக்கூடும், உங்களைப் பற்றியதான காரியத்தை சொல்லக்கூடும். அது சரிதானே? இது ஒரு நரம்பு கோளாறு சம்பந்தப்பட்டது; நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். அதன் காரணம், உங்களது சிந்தையில் நீங்கள் யாருக்காகவோ ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது இரண்டு குழந்தைகள்; அவர்கள் ஒரு மனநல மருத்துவமனையில் இருக்கிறார்கள். அது மிகவும் சரியானது. நீங்கள் அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உம்முடைய பெயர், திரு. மெக்ரீ (Mr. McCree). வீட்டிற்குச் சென்று உம்முடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். 67. வாருங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். இப்பொழுது, ஜனங்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்கப் போகிறோம். ஆனால், சற்றுப் பொறுங்கள், இங்கே இந்த ஸ்திரீ இருக்கிறாள், ஒரு நிமிடம். நான் ஒரு மனிதனையும் ஸ்திரீயையும் அழைக்கப் போகிறேன், எனவே அவர்களால் பார்க்க முடியும். நல்லது, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். நம் இருவரையும் இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார், இல்லையா? நான் உங்களை அறியேன். உங்களுக்கும் என்னைத் தெரியாது, எனவே நாம் அந்நியர்களாயிருக்கிறோம். ஆனால் நீங்கள் உங்களுக்காக இங்கே இல்லை; வேறு யாரோ ஒருவருக்காக இருக்கிறீர்கள். உங்களுக்கான சுகத்தை நீங்கள் கடந்த இரவே ஏற்றுக்கொண்டீர்கள், அது உண்மை, சரி. ஆனால், இங்கே நீங்கள் உங்கள் கணவருக்காக இருக்கிறீர்கள். அவர் இங்கே இல்லை. அவர் ஓரிகன் (Oregon) மாகாணத்தில் இருக்கிறார். அவருக்கு புற்றுநோய் உள்ளது, அவர் பின்வாங்கிப் போனவராய் இருக்கிறார், நீங்கள் அவருக்காக இங்கே இருக்கிறீர்கள், அது சரியே. அது கர்த்தர் உரைக்கிறதாவது. விசுவாசத்தோடு செல்லுங்கள். தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 68. இப்பொழுது, நாம் -- நாம் ஜெபிப்போம். புதிதாக வந்தவர்கள் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. இப்பொழுது, வரிசையாக வருவதற்கு நாம் அவர்கள் அனைவரையும் இங்கே நிற்க வைத்திருக்கிறோம். அவர்கள் கடந்து போகையில் அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபிப்போம். சரி. இதைக் குறித்ததான எல்லாவற்றையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். சகோதரியே வாருங்கள். இப்பொழுது, பிதாவாகிய தேவனே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்மேல் இருக்கையில், கரங்களை வைத்து, இந்த ஸ்திரீக்காக ஜெபிக்கிறேன் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). 69. வீட்டிற்குச் சென்று, சுகமடையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, சுகமடையுங்கள். பாருங்கள்? அது -- அது -- அது... பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? இந்த ஜனங்கள் கடந்து போகையில்... அவர்கள் சுகமடைய மாட்டார்கள் என்ற அர்த்தத்தில் நான் அதை கூறவில்லை. பாருங்கள், அவர் இன்னமும் இங்கே இருக்கிறார். இந்த ஸ்திரீ இங்கே... 70. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். கர்த்தராகிய இயேசு நம் இருவரையும் அறிந்திருக்கிறார். உம்முடைய தொல்லை என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. உங்களுக்கு நரம்பு கோளாறு உள்ளது, அது உங்கள் தலையில் ஏதோ சிக்கலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர் உங்களை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பெயர் ஆலிஸ் வில்சன் (Alice Wilson). நீங்கள் 204-ல் வசிக்கிறீர்கள். (அந்த ஸ்திரீ அழுகிறாள் – மொழி.). அது சரியே. அது உங்கள் வீதியின் எண். இப்பொழுது நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? வீட்டிற்குச் செல்லுங்கள். உங்களது சுகத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 71. சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் சிரமத்துடன் (நொண்டி) நடப்பதை காண்கிறேன். தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் சுகமடைவீர்களாக. ஆமென். வாருங்கள், என் சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இங்கே இருக்கிற வேளையில், யோவான் மரித்த நிலையில் இருந்த போது அவனை துள்ளப் பண்ணின அதே நாமமானது உங்கள் மேல் உரைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். களிகூறுதலோடு செல்லுங்கள், ஆமென். கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய இந்த சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை சுகப்படுத்தும், ஆமென். வாருங்கள், என் சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் சுகமடைவீர்களாக, ஆமென். வாருங்கள், என் சகோதரியே, அவரை இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவள் மீது என் கரங்களை வைக்கிறேன். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று நீர் கூறினீர். இவள் சுகமடைவாளாக, ஆமென். என் சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் என் கரங்களை என் சகோதரன் மீது அவருடைய சுகத்திற்காக வைக்கிறேன். ஆமென். இப்பொழுது வாருங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம் – ஆசி] 72. நீங்கள் இங்கே உங்களுக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்காக இருக்கிறீர்கள். அவர்களுக்கு புற்றுநோய் உள்ளது. அவர்கள் அர்கன்சாஸ்-ல் (Arkansas) வசிக்கிறார்கள். விசுவாசத்தோடு செல்லுங்கள். அவர்கள் சுகமடைவார்கள். தொடர்ந்து விசுவாசியுங்கள். தொடர்ந்து விசுவாசியுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னுடைய சகோதரன் சுகமடைவாராக, ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது ஒரு இறைச்சி ரொட்டியை (hamburger) உங்களுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அந்த வயிற்றுத் தொல்லை உங்களை விட்டு நீங்கி விட்டது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த சகோதரன் சுகமடைவாராக, ஆமென். [ஒலிநாடாவில் காலியிடம் – ஆசி]. சரியாக பின்னால் அங்கே இருப்பவருக்கு ஒரு வித கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. தேவன் உங்களை சுகமாக்குகிறார். வீட்டிற்குச் செல்லுங்கள், நலமாக இருங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட்டார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னுடைய சகோதரி சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னுடைய சகோதரி சுகமடைவாளாக. 73. அங்கே பின்னால்... சரியாக பின்னால், இங்கே நடுவில். இரண்டு ஸ்திரீகள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நரம்பு புடைப்பு (varicose veins) உள்ளது. அவருக்கு அருகில் இருக்கும் மற்றொருவருக்கு அவளது கழுத்தில் ஏதோவொரு கோளாறு, மேலும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை (bowel trouble) உள்ளது. எழுந்திருங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அல்லேலூயா. விசுவாசியுங்கள். இவளுக்காக அவர்கள் அங்கே ஜெபம் பண்ணி கொண்டிருந்தார்கள். அது தான் அதைச் செய்தது. ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். விசுவாசம் கொண்டிருங்கள். பாருங்கள்? தேவனிடம் விசுவாசம் கொள்ளுங்கள். 74. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, சென்று, சுகமடையுங்கள். அன்பான சகோதரியே, வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவள் சுகமடைவாளாக. வாருங்கள், என் சகோதரனே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர் சுகமடைவாராக. இதை அளியும். இந்தச் சிறு பையன், ஓ, கர்த்தராகிய தேவனே, இந்த சிறிய முடமான சிறுவனை சுகப்படுத்தும். அவன் சுகமடைந்து நடந்து செல்லட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். எங்கள் சகோதரியை ஆசீர்வதியும், சுகப்படுத்தும், இயேசுவின் நாமத்தில். என் சகோதரனை சுகப்படுத்தும், பிதாவே, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். அன்பான என் சகோதரியே வாருங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவள் சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரி சுகமடைவாளாக, ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரன் சுகமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரன் சுகமடைவாராக. அங்கே பின்னால் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற, அந்த வரிசையின் கடைசியில், அங்கே உள்ள அந்த சீமாட்டிக்கு முதுகு மற்றும் இடுப்பு பிரச்சனை உள்ளது, இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். விசுவாசித்து வீட்டிற்குச் செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாருங்கள், இயேசுவின் நாமத்தில் சுகமடைவீர்களாக, ஆமென். 75. எப்படி இருக்கிறீர்கள், ஐயா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். நான் உங்களை அறியேன். நான் உங்களை கண்டதில்லை. நாம் பூமியில் காணப்படுகிற வெறும் மனிதர்களே, அவ்வளவுதான்; தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பின பரலோகத்தின் தேவனானவர், உங்களை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது அருமையான விசுவாசம் (good faith). தேவன் உம்முடைய தொல்லை என்ன என்பதை என்னிடம் கூறமுடியுமானால், நான் அவருடைய ஊழியக்காரனென்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? உங்களுக்கு மூட்டுவாதம் (arthritis) உள்ளது, ஒரு காரியம், உங்களால் காலையில் எழுந்திருக்கவே முடியாது, அது சரியே. உங்களுக்கு கல்லீரல் தொல்லை (liver trouble) உள்ளது. நீங்கள் விசுவாசத்தில் ஒரு கத்தோலிக்கர். அது சரியே. உங்களுடன் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் சரியாக அங்கே உட்கார்ந்திருக்கிறார். அவருடைய தொல்லை என்ன என்பதை தேவன் என்னிடம் கூறுவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவருக்கு காலில், அவருடைய முட்டியில் பிரச்சனை உள்ளது. அவருக்கு சிக்கல்களும் உள்ளன. அது சரிதான். இல்லையா? எல்லாமே போய்விட்டது. நீங்கள் இருவருமே வீட்டிற்குச் சென்று நலமாய் இருங்கள். இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார், ஐயா, ஆமென், ஆமென். 76. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? யாவும் கைகூடிடும்; வெறுமனே விசுவாசியுங்கள். மீதமுள்ள மற்றவர்கள் எத்தனைபேர் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது, வேதாகமம், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறுகிறது. இன்னுமாக ஜெப அட்டைகளை அழைப்பதற்கான போதிய நேரம் நமக்கு இல்லை. ஏற்கனவே பத்து மணி கடந்துவிட்டது. உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். நான் இங்கே இருந்து உங்களுக்காக ஜெபிப்பேன். உங்களுக்கு என்ன தொல்லை இருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. வெறுமனே உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். உங்களுக்கு என்ன தொல்லை இருந்தாலும் எனக்கு அது காரியமல்ல. வேதாகமம், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்; உங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார். எனவே, அது அதே தேவனாயிருக்கிறது. எவ்விடத்திலுமுள்ள நீங்கள் ஒவ்வொருவரும், ஒருவர் மீது ஒருவர் உங்கள் கரங்களை வைத்து உங்களுக்குண்டான எல்லாவற்றையும் கொண்டு விசுவாசியுங்கள். 77. ஓ, கர்த்தராகிய தேவனே, வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே, பிசாசை, சத்துருவின் வல்லமையை இப்பொழுதே நான் கடிந்து கொள்கிறேன். சாத்தானே, இனிமேல் உன்னால் இந்த ஜனங்களை பிடித்து வைக்க முடியாது. இவர்கள், மரியாள் செய்த அதே விதமாக வார்த்தையை விசுவாசிக்கிறார்கள். மரியாள் செய்த அதே விதமாக இவர்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களை விட்டு வெளியேறு, வியாதி மற்றும் தொல்லை என்கிற அசுத்த ஆவிகளே, ஜனங்கள் சுகமடையும் பொருட்டு அவர்களை விட்டு வெளியேறுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.